ETV Bharat / state

ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம் செய்யப்பட்ட நபர்.. உயிரோடு வந்ததால் பரபரப்பு! - MAYILADUTHURAI DEATH ISSUE

மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்பட்ட நபர் உயிரோடு வந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்ததாகக் கருதப்பட்டு தகனம் செய்த நிலையில் உயிருடன் வந்த நபர்
இறந்ததாகக் கருதப்பட்டு தகனம் செய்த நிலையில் உயிருடன் வந்த நபர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 7:58 AM IST

மயிலாடுதுறை: காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதி சடங்கு செய்து தகனம் (எரியூட்டப்பட்டு) செய்யப்பட்ட நபர் உயிரோடு வந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில், ஆண் நபரின் சடலம் ஒன்று காவிரி ஆற்றில் மிதந்து வந்ததுள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதுகுறித்து தகவலறிந்த வந்த செம்பனார்கோவில் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் ஆற்றில் மூழ்கி இறந்தது மருதூர் லட்சுமி நாராயணபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 62) என்ற நபர் எனக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் செல்வராஜின் மனைவி சாந்தி மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு செல்வராஜ் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதி காரியங்களுக்குப் பிறகு, செல்வராஜின் உடலை குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று திடீரென வெளியூரில் இருந்து மருதூர் கிராமத்திற்கு செல்வராஜ் வந்துள்ளார். அப்போது, இறந்ததாகக் கருதப்பட்ட செல்வராஜ் உயிரோடு வந்து நின்றதைக் கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான், செல்வராஜ் என்று கருதி அடையாளம் தெரியாத ஒருவரின் உடலைத் தகனம் செய்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: திருமணமான ஓராண்டில் இளம்பெண் மரணம்.. கடைசியாக வந்த 'போன் கால்'.. ஆவடியில் பரபரப்பு..!

இதுகுறித்து செல்வராஜ் தெரிவிக்கையில், ”செல்வராஜ் மனைவி சாந்தி மற்றும் மகன் மற்றும் மகள்கள் குத்தாலம் தாலுக்கா மாந்தை கிராமத்தில் தற்போது வசித்துவரும் நிலையில், செல்வராஜ் தனது சொந்த ஊரான மருதூர் பகுதிக்கு வந்துவிட்டு சில நாட்களில் ஈரோட்டில் உள்ள தனது முதலாளியைப் பார்க்கச் சென்று அங்கே வேலை செய்ததாகவும், மீண்டும் ஊருக்கு வந்து பார்த்தபோது, தன்னை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்து விட்டதாகவும், தான் இறந்து விட்டதாக காவிரி ஆற்றில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஒருவரின் உடலைப் பெற்று குடும்பத்தினர் காரியங்கள் செய்து தகனம் செய்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், செல்வராஜ் தனது குடும்பத்தினரிடம், "30 படைத்துவிட்டீர்களா? சரக்கு வைத்துப் படைத்திருப்பீர்களே, எங்கே அந்த சரக்கு என்று சிரித்துக்கொண்டே கூறிய செல்வராஜ், நான் 100 வயதில் சாவேன். எனக்கு இப்போது சாவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உயிருடன் உள்ள நபர் இறந்துவிட்டதாகக் கருதி யார் என்று தெரியாத உடல் தகனம் செய்யப்பட்டதால், இறந்த நபர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இச்சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம், துறையம்பாளையம் கிராமத்தில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்ட பின்னர், சில நாட்களிலேயே அந்த நபர் திரும்பி உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.