பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் விளையாட்டில் 57 கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அமன் ஷெராவத் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வடக்கு மசடோனியாவை சேர்ந்த விளாடிமிர் எக்ரோவ் என்பவரை எதிர்கொண்டார். அபாரமாக விளையாடிய அமன் ஷெராவத், வடக்கு மசடோனியா வீரரை கிடுக்குபிடி நகர்வுகளால் திணறிடித்தார்.
ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் அமன் ஷெராவத் கால் இறுதிக்கு தகுதி! - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024
பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
Published : Aug 8, 2024, 3:23 PM IST
அமன் ஷெராவத்தின் அதிரடி ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் விளாடிமர் எக்ரோவ் கடுமையாக திணறினார். அபாரமாக விளையாடிய அமன் இறுதியில் 10-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் வடக்கு மசடோனியா வீரரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தத்தின் கால் இறுதி சுற்றுக்கு அமன் ஷெராவத் தகுதி பெற்றார்.
இதையும் படிங்க:வினேஷ் போகத்துக்கு பாரத ரத்னா.. ராஜ்ய சபா எம்பி பதவி! வலுக்கும் கோரிக்கை! - Paris olympics 2024