தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"Fanboy Moment": விஸ்வநாதன் ஆனந்துடன் ஃபேன் பாய் அஸ்வின் எடுத்து கொண்ட படம் வைரல்!

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துடனான விமான பயணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அஸ்வின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Etv Bharat
Ravichandran Ashwin (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 11, 2024, 4:26 PM IST

ஐதராபாத்: இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். அண்மையில் வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்நிலையில், விமான பயணத்தின் போது, செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அஸ்வின் பெருமிதம் அடைந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும், செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தும் ஒன்றாக உள்ளனர். மேலும், அந்த படத்தின் கீழ், "செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துடன் ஃபேன் பாய் மொமன்ட் மற்றும் ஒரு விமானப் பயணம்" என்று அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுட்டுள்ளார்.

ஐந்து முறை உலக சாம்பியன் மற்றும் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். அதேநேரம் இந்த ஆண்டு நடைபெற்ற குளோபல் செஸ் லீக் தொடரில் அமெரிக்கன் கேம்பிட்ஸ் (American Gambits) என்ற அணியின் இணை உரிமையை வாங்கி உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை தவிர்த்து தொழில் ரீதியாகவும் அஸ்வின் - விஸ்வநாதன் ஆனந்த் இடையே செஸ் விளையாட்டின் உறவு நீண்டு வருகிறது. விஸ்வநாதன் ஆனந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அஸ்வின் வெளியிட்ட நிலையில், தற்போது அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அண்மையில் இந்திய அணி நியூசிலாந்து எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்து ஒயிட் வாஷ் ஆனது. நியூசிலாந்து தொடரை இழந்ததால் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து இந்த மாத இறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.

அதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை 5-க்கு 0 அல்லது 4-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணி நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற முடியும். இல்லையெனில் இலங்கை, நியூசிலாந்து அணிகளின் டெஸ்ட் தொடர் முடிவுகளுக்காக காத்திருகக் வேண்டி வரும்.

இதையும் படிங்க:"சிஎஸ்கேவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் தோனி விளையாடுவார்?"- சிஇஓ காசி விஸ்வநாதன் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details