சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சத்தயபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரஷசர்ஸ் டே நிகழ்ச்சியில் பும்ரா பங்கேற்றார்.
பும்ராவுக்கு கல்லூரியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரங்கம் நிறைந்த மாணவர்கள் மத்தியில் தோன்றிய பும்ரா அனைவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்டது குறித்து ஜஸ்பிரீத் பும்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் விழாவை கொண்டாடிய வீடியோவையும் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து பும்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில், "மாணவர்கள் கூட்டத்தின் இடையே கிடைத்த உற்சாகமும் ஆனந்தமும் அளவிட முடியாதது, அன்பான உபசரிப்பு மற்றும் வரவேற்பு அளித்த சத்யமாபா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். சொகுசு காரில் விழாவுக்கு வந்த ஜஸ்பிரீத் பும்ரா அங்கிருந்த மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நீல நிற அரைக்கை சட்டையும், சாம்பல் நிற பேண்ட்டும் பும்ரா அணிந்து இருந்தார். பின்னர் கல்லூரி மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பும்ரா விழாவை கொண்டாடினர். இந்நிலையில் பும்ராவின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பும்ராவின் பதிவுக்கு கீழே அவரது ரசிகர்கள் பல்வேறு கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.