சென்னை :8வது ஆசிய சாம்பியன்ஷிப் டிராஃபி ஹாக்கி போட்டி, சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடின.
அந்த வகையில், இந்திய அணி லீக் போட்டியில் சீனா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தியது. முன்னதாக, கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி.
இதையும் படிங்க :ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி! - Asian Championship Hockey
பின்னர், அரையிறுதி போட்டியில் இந்திய ஹாக்கி அணி தென்கொரியாவை எதிர்கொண்டு, 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரிய ஹாக்கி அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதன்படி இன்று(செப் 17) இறுதி போட்டியானது நடைபெற்றது.
இதில், சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆசிய சாம்பியன்ஷிப் டிராஃபி தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது.