பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி இணை, மலேசியாவை சேர்ந்த ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய இணை 21-க்கு 13, 14-க்கு 21 மற்றும் 16-க்கு 21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.
தொடக்கத்தில் இரு போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் 11-க்கு 10 என்ற கணக்கில் இரு தரப்பினரும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதன்பின் சிறிய இடைவேளையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய இந்திய ஜோடி தொடக்க செட்டை 21-க்கு 13 என்ற கணக்கில் கைப்பற்றியது.