தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

லண்டனில் குடியேறும் விராட் கோலி! அடிக்கடி லண்டன் பயணத்தின் பின்னணி என்ன? - Virat Kohli Cross Road Viral Video

லண்டனில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சாலையை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Virat Kohli
Virat Kohli (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Aug 16, 2024, 5:54 PM IST

லண்டன்: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆக்யோர் நீண்ட ஓய்வில் உள்ளனர். இந்நிலையில், விடுமுறையை கழிக்க லண்டன் சென்று உள்ள விராட் கோலி அங்குள்ள ஒரு சாலையை தனியாக கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில் வெள்ளை நிற டி சர்ட் மற்றும் ஜாக்கெட் அணிந்து கொண்டு விராட் கோலி சாலையை கடந்து செல்கிறார். இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலான நிலையில் நெட்டிசன்கள் தொடர்ந்து கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம் கடந்த சில நாட்களுக்கு முன் விராட் கோலி லண்டனில் நிரந்தரமாக குடியேறி விட்டதாக தகவல் பரவியது.

குடும்பத்துடன் அவர் நீண்ட நாட்களாக லண்டனில் தங்கி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கையோடு மீண்டும் அவர் லண்டன் சென்று இருப்பது வதந்திகளை உண்மையாக்குவது போல் இருப்பதாக கூறப்படுகிறது. அனுஷ்கா சர்மாவுடன் அடிக்கடி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விராட் கோலி, லண்டனில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டிக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

20 ஓவர் உலக கோப்பை முடிவடைந்த கையோடு லண்டன் சென்ற விராட் கோலி அதன்பின் இலங்கை தொடரில் கலந்து கொள்வதற்காக மீண்டும் இந்தியா வந்தடைந்தார். தற்போது இலங்கை தொடர் முடிந்ததும் மீண்டும் அவர் லண்டன் சென்று இருப்பது அங்கேயே அவர் செட்டிலாக திட்டமிட்டு இருப்பதை உறுதிப்படுத்துவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

டெல்லியை சேர்ந்தவர் விராட் கோலி, அவரது பெற்றோர் சகோதரர் உள்ளிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் டெல்லியிலேயே வசித்து வருகின்றனர். அனுஷ்கா சர்மாவுடனான திருமணத்திற்கு பின்னர் விராட் கோலி மும்பையில் குடிபெயர்ந்தார். இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024: தேசியக் கொடியை சுமந்து செல்லும் வாய்ப்பு யாருக்கு தெரியுமா? - Paris Paralympics 2024

ABOUT THE AUTHOR

...view details