ஆரோக்கியமாக இருக்க, உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாய் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாய்வழி சுகாதாரத்தை கடைபிடிப்பது, நமது தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி பல உடல்நல பிரச்சனைகளையும் தடுக்கும். எனவே, பற்கள் மற்றும் ஈறுகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கடைபிடிக்க வேண்டும் 6 பழக்கங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆயில் புல்லிங்: தினமும் காலையில் வாயில் எண்ணெய் வைத்து கொப்பளிப்பது, வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள், பற்கள் மற்றும் வாயின் ஓரங்களில் சிக்கியிருக்கும் உணவுத் துகளை வெளியேற்றும். இதனால், பற்கள் வலு பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மேலும், வாய் புண் போன்ற பிரச்சனைகளும் வராது.
சர்க்கரை அளவை குறைக்கவும்: சர்க்கரை அதிகம் மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது பல் சொத்தை, பல் சிதைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதே போல, ஆரஞ்சு, லெமல், நெல்லிக்காய் போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரஸ் அமிலம் பற்சிப்பியை அரித்து, பற்களில் வலுவை குறைத்து வலியை ஏற்படுத்தும்.
வாய் கழுவுதல்: மவுத்வாஷ் பயன்படுத்துவது வாய் ஆரோக்கியம் மட்டுமல்லாது பற்களை பராமரிக்க உதவும். வாய் துர்நாற்றம் மற்றும் ஈறு நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் இது நன்மை பயக்கும். மவுத்வாஷ் பற்களில் சொத்தை ஏற்படுவதை தடுக்கவும், ஈறுகளை உணர்திறனிலிருந்து பாதுகாக்கவும் உதவும்.
இரண்டு முறை பல் துலக்கவும்: பற்களை சுத்தமாக வைத்திருக்க காலை மற்றும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பல் துலக்குவது அவசியம். இது பல் பற்சிப்பியை வலுப்படுத்தவும் பாக்டீரியாவை அழிக்கவும் உதவுகிறது. இதற்கு ஃவுளூரைடு பற்பசை மற்றும் மென்மையான பிரஷ்ஷைப் பயன்படுத்தவும். சிறுவயதில் இருந்து இந்த பழக்கத்தை செய்து வர, பற்கள் பளபளப்பாகவும் , ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மருத்துவ ஆலோசனை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது . இது பல் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து ஆரோக்கியமான பற்களை பராமரிக்க உதவுகிறது.
ஆரோக்கியமான பற்களுக்கு சிறந்த உணவுகள்:
- ஆப்பிள்
- பால், தயிர், மோர் போன்ற பால் பொருட்கள்
- நட்ஸ்
- க்ரீன் டீ
- எப்போதும் நீரேற்றமாக இருக்க தண்ணீர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
இதையும் படிங்க:
முதுமையில் கூர்மையான பார்வையை தக்கவைக்கும் 6 காய்கறிகள்!
யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா? அப்போ இந்த காய்கறியை உணவில் சேர்த்து பாருங்கள்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.