ETV Bharat / entertainment

பிரபுதேவாவுடன் போட்டி போட்டு நடனமாடிய இளைஞர்... ரசிகர்களுக்கு காத்திருந்த ஆனந்த அதிர்ச்சி! - PRABHU DEVA DANCE CONCERT

Prabhu Deva Dance Concert: சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பிரபுதேவாவிற்கு இணையாக நடனமாடிய இளைஞரை அவரே யார் என தெரிவித்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிரபுதேவா
பிரபுதேவா (prabhudevaofficial Instagram Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 26, 2025, 4:26 PM IST

சென்னை: நடிகரும், இந்தியாவே கொண்டாடும் நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை(பிப்.22) பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரபுதேவாவின் ரசிகர்கள், பல்வேறு திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பிரபுதேவா. நடன இயக்கம், நடிப்பு, இயக்கம் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் பிரபுதேவா, இதுவரை தனது நடன நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்க நேரடியாக எங்கும் நடத்தியதில்லை. முதல் முறையாக சென்னையில் கடந்த வாரம் நேரடி நடன நிகழ்ச்சியை நடத்தினார்.

அருண் ஈவென்ட்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்த பிரபுதேவாவின் இந்த லைவ் நடன நிகழ்ச்சியில் 100 நடன கலைஞர்களுக்கு மேல் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நடன இயக்குநர் சாண்டி, நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத். நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், சானியா ஐயப்பன், ஜனனி, ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடி, ரசிகர்களை மகிழ்வித்தனர். மேலும் இந்நிகழ்வில், நடிகர் பாக்யராஜ், வடிவேலு, எச்.ஜே.சூர்யா, தனுஷ் நடிகைகள் ரம்பா, மீனா, ரோஜா, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் மூலம் ரசிகர்களுக்கு ஆச்சரியம் மட்டுமல்லாமல் ஆனந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார் பிரபுதேவா. வீடியோ ஒன்றில் ’பேட்ட ராப்’ பாடலுக்கு பிரபு தேவாவிற்கு இணையாக நடனமாடி இளைஞர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவருடன் நடன இயக்குநர் சாண்டியும் ஆடினார். அதன் பிறகு பிரபு தேவாவுடன் போட்டி போட்டு ஆடிய இளைஞன் தான் அவரது மகன் என அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார் பிரபுதேவா. இதனை பிரபுதேவா தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அவரும் அவரது மகனும் ஆடக்கூடிய இந்த வீடியோவை பதிவிட்டு, ”எனது மகன் ரிஷி ராகவேந்திர தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். முதல் முறையாக பொதுவெளியில் அவனும் நானும் இணைந்து மேடையை பகிர்றோம். இந்த விஷயம் நடனத்தை தாண்டியது. பாரம்பரியம், மரபு, ஆர்வம் ஆகியவற்றின் தொடக்கமாக, இந்தப் பயணம் தற்போது தொடங்கியுள்ளது” என பகிர்ந்துள்ளார்.

பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் அப்போதைய மிகப்பிரபலமான நடன இயக்குநர். அதைப் போலவே பிரபுதேவாவின் அண்ணன் ராஜூ சுந்தரமும் வெற்றிகரமான நடன இயக்குநர் தான். அத்தகைய நடன குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு வந்துள்ளார்.

இதையும் படிங்க: ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனத்தை கைப்பற்றிய இளையராஜா பயோபிக் தயாரிப்பு நிறுவனம்!

முன்னதாக இந்நிகழ்வில் ‘ரெளடி பேபி’ பாடலுக்கு தனுஷும் பிரபுதேவாவும் மேடையில் நடனமாடிய காணொளியும் இணையத்தில் வைரலானது. அதே போல, ’பேட்ட ராப்’ பாடலுக்கு பிரபுதேவாவும் வடிவேலுவும் செய்த சேட்டைகள் மற்றொரு சுவாரசியமான விஷ்யம். அது மட்டுமல்லாமல் எஸ்.ஜே.சூர்யாவின் எதிர்பாரத நடனம் என ஆச்சரியங்களை தந்தது பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி.

இப்படியாக ரசிக்கும்படியான விஷயங்கள் நடந்தாலும் குறைகளும் விமர்சனங்களும் எழாமல் இல்லை. நிகழ்வு ஏற்பாடுகளில் குளறுபடி, ஒழுங்கான இட வசதியில்லை என பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. எழுந்துள்ளன. முக்கியமாக நடன நிகழ்ச்சி என கூறிவிட்டு பல்வேறு திரைபிரபலங்களை அழைத்து விருது நிகழ்ச்சி மாதிரி நடத்தப்பட்டது என்றும் பார்வையாளர்கள் ஆடுவதற்கு இடம் இல்லை என அதிருதிகள் தெரிவிக்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.