கோடை காலம் வந்து விட்டால் போதும் கொளுத்தும் வெப்பமும் அழையா விருந்தாளியாக வந்து அனைவரையும் வாட்டி வதைத்துவிடும். இந்த கோடை வெப்பத்தை சமாளிப்பதற்காக பலரும் ஏ.சியை இ.எம்.யி-லாவது வாங்கி மாட்டிவிடுகிறார்கள். என்ன தான் இரவில் ஏ.சி பயன்படுத்தினாலும், பகல் முழுவதும் பயன்படுத்த முடியாது. அந்த வகையில், கோடை காலத்தில் வீட்டை இயற்கையான முறையில் குளுமையாக வைக்க உங்களுக்காக டிப்ஸ் கொண்டு வந்திருக்கிறோம்..
- உஷ்ணத்தை உருவாக்கும் கருவிகள் உதாரணத்திற்கு இன்டக்ஷன் ஸ்டவ் போன்ற சமையல் கருவிகள் மற்றும் சுத்தம் செய்ய பயன்படுத்தும் வாஷிங் மெஷின், வேக்கம் கிளீனர் போன்றவற்றை காலையிலோ அல்லது சூரியன் மறையும் மாலை நேரத்தில் இயக்குவது சிறந்தது.
- அனல் காற்று வீட்டிற்குள் வராதவாறு வெளிர் நிற காட்டன் திரைச்சீலைகளைப் பயன்படுத்த வேண்டும். இதனால் அனல் காற்று வீட்டிற்குள் வராமல் இருக்கும். ஜன்னலை திறந்து திரைச்சீலகளை முழுவதுமாக இறக்கிவிடுங்கள்.
- செயற்கை நார்களைப் பயன்படுத்தி உருவான படுக்கைகளில் படுப்பதை மற்றும் சீட்களில் உட்காருவதை தவிர்க்கவும். கோடை காலத்தில் காட்டன் படுக்கைகளை முடிந்தவரை பயன்படுத்துங்கள். குறிப்பாக, காட்டன் உடைகளை அணியவேண்டும்.
- மாடி வீட்டில் குடியிருப்பவர்கள், வீட்டின் கூரையாக இருக்கும் தளத்தை இரவில் நீரை தெளித்து குளிர்ச்சிப்படுத்துங்கள்.
- வீட்டில் பல நாட்களாக, மாதங்களாக தேக்கி வைத்துள்ள பொருட்களை நீக்குங்கள். தேவையற்ற மர சாமான்கள், பழைய நோட்டு, நியூஸ் பேப்பர்கள் போன்றவற்றை நீக்கி அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். காற்று உள்ளே செல்ல இடத்தை விசாலமாக்கி வைப்பது சிறந்தது.
- வீட்டில் பல நாட்களாக, மாதங்களாக தேக்கி வைத்துள்ள பொருட்களை நீக்குங்கள். தேவையற்ற மர சாமான்கள், பழைய நோட்டு, நியூஸ் பேப்பர்கள் போன்றவற்றை நீக்கி அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். காற்று உள்ளே செல்ல இடத்தை விசாலமாக்கி வைப்பது சிறந்தது.
- வீட்டில் மின்விளக்குகள், பல்புகள் தேவையில்லாமல் எரிந்தாலோ, கணினி போன்ற மின் சாதனப் பொருட்கள் தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தால் அதை அனைத்து விடுங்கள். இப்படி செய்வதால் அறையில் ஏற்படும் வெப்பத்தை குறைத்து குளுமையாக வைத்திருக்க உதவுகிறது.
- மெத்தை, தலையணை, ஸ்கிரீன், சோஃபா கவர் போன்றவற்றில் காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள். காட்டன் குளிர்ச்சியை தக்க வைக்கும். அதே போல, சூட்டை கிளப்பாமலும் இருக்கும். சிந்தடிக் சூட்டை கிளப்பக் கூடியது என்பதால் அவற்றை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
- கோடை காலத்திற்கு என இருக்கும் பெயிண்ட்களை பயன்படுத்தலாம். வீட்டினுள் உள்ள சுவர்களுக்கு லைட் ஷேட் கலர்களைப் பயன்படுத்தலாம். கருப்பு, சிவப்பு போன்ற டார்க் கலர்கள் உஷ்ணத்தை வீட்டினுள் இழுத்துக்கொள்ளும்.
- வீட்டில் பால்கனி இருந்தால் சின்ன சின்ன பூச்செடிகள் மற்றும் குரோட்டன்ஸ் ஆகியவற்றை பானைகளில் வளர்க்கலாம். கொடி வகைகளை வளர்ப்பதால் அனல் காற்று தவிர்க்கப்படும். மேலும், வீட்டிற்குள் வளர்க்கப்படும் இண்டோர் பிளான்ட்களை வளர்ப்பதால் குளிர்ச்சியான காற்று படரும்.
- ஜன்னல்களுக்கு வெளியே சன் ஷேடுகளை வைப்பதால் சூரிய ஒளி வீட்டிற்குள் வருவதை அனுமதிக்காது.
- வீட்டில் உள்ள சிலிங் ஃபேன் 4 டிகிரி வரை சூட்டை குறைத்து குளுமையாக வைத்திருக்கும். அதனால், ரூம்களுக்குத் தகுந்தபடி ஃபேன்களின் அளவு இருக்க வேண்டும். பெரிய அளவிளான அறைகளில் சிறிய ஃபேன் இருந்தால் வெப்பம் வெளியேறாது.
- காலை மற்றும் மாலை என தினசரி வீட்டை இரண்டு வேளை துடைப்பதால் இரவு தூங்கும் போது குளிர்ச்சியாக இருக்கும்.
- வீட்டின் மெட்டை மாடி தளத்தை குளிர்ச்சியாக இருந்தால் வீட்டிற்குள் வெப்பம் இறங்காது. அதனால், சூரியன் மறைந்ததும் மாலை நேரத்தில் மொட்டை மாடியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். இல்லையென்றால், பச்சையான தென்னை ஓலைகளை மாடியில் பரப்புவதன் மூலம் நேரடியாக வெப்பம் தாக்குவதை தவிர்க்கலாம்.
- கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தனிப்பதும் முக்கியம். அடிக்கடி நீர் அருந்துவதால் வெப்பம் தனிந்து ஈரப்பதம் தக்க வைக்கப்படும். அதே போல், தர்பூசணி, முலாம் பழம், வெள்ளறி போன்ற நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களை உட்கொள்வது சூட்டை தனிக்கிறது.