புடாபெஸ்ட்:செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஹங்கேரியில் தலைநகரம் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் இறுதிச் சுற்றில் ஸ்லோவோனியாவை எதிர்த்து விளையாடிய இந்திய ஆடவர் அணி என்ற 3.5 -0.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் 21 புள்ளிகளைப் பெற்ற தங்கபதக்கததை தன்வசப்படுத்திய இந்தியா. இதே போல் இந்திய மகளிர் அணியும் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் என இரண்டிலும் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன், 2014 மற்றும் 2022இல் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா 2020இல் கோவிட்-19 இன் போது நடந்த ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், ரஷ்யாவுடன் தங்கத்தைப் பகிர்ந்து கொண்டது. இந்தநிலையில் இந்திய ஆடவர் பிரிவின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரீநாத் வெற்றி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,"தங்கம் வென்றது ரொம்ப பெருமையான தருணமாக இருக்கிறது. இருப்பினும் இந்த தருணத்தை இப்போது எங்களால் உணர முடியவில்லை,அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. 4 புள்ளிகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்று இருக்கிறோம். 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கல பதக்கம் வென்றிருந்தோம்.
செஸ் ஒலிம்பியாட் வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரீநாத் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) அப்போது தவறவிட்டதை தற்போது வெற்றி பெற்று இருக்கிறோம். கடந்த போட்டிகளில் எதிரனியுடன் மிக நெருக்கமாக வந்து வெற்றியைத் தவற விட்டோம். ஆனால் இப்போது நடைபெற்ற போட்டியில் அதற்கான வாய்ப்பு கொடுக்காமல் தொடக்கத்திலிருந்தே அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்றோம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லாத அளவுக்கு இந்த தொடர் அமைந்துள்ளது. கடந்த 10 வருடங்களாகவே தற்போது இருக்கும் வீரர்களை பார்த்து வருகிறோம், அவர்கள் சிறுவயதிலிருந்தே நன்கு விளையாடி வருகிறார்கள். அவர்கள் எந்த அளவுக்கு விளையாடுவார்கள் என்பது நமக்கு நன்றாக தெரியும். குறிப்பாக தமிழ்நாட்டு வீரர்கள் பற்றி நன்றாகத் தெரியும். இதனை உலகம் முழுவதுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் செஸ் போட்டியில் இன்னும் அதிகமாக வெற்றிகளை பெறுவோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம்.. ஹங்கேரியில் வரலாறு படைத்த இந்தியா!