ETV Bharat / bharat

27 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியை கைப்பற்றியது பாஜக... கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா வெற்றியை பறித்த காங்கிரஸ்! - BJP COME BACK IN DELHI

டெல்லியில் ஆட்சி அமைக்கிறது பாஜக. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி பல தொகுதிகளில் தோல்வியடைவதற்கு காங்கிரஸ் காரணமாக இருந்திருக்கிறது.

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம் (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2025, 5:25 PM IST

Updated : Feb 8, 2025, 5:31 PM IST

புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவையை 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக மீண்டும் கைபற்றி ஆட்சி அமைக்கிறது.

தேசத்தை ஆளும் வாய்ப்பை 10 ஆண்டுகளுக்கும் மேலாக தக்க வைத்துக் கொண்டிருந்த பாஜகவால், டெல்லி யூனியன் பிரதேச மாநிலத்தின் ஆட்சியை கடந்த 10 ஆண்டுகளாக பிடிக்க முடியவில்லை என்ற அதீத ஏக்கத்தில் இருந்தது. எனவே, இந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருந்தது. அதில் இப்போது வெற்றியும் பெற்றிருக்கிறது.

ஊழல் எதிர்ப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் பாஜக 1993ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. 1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை மூன்று முறை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. முதலமைச்சராக ஷீலா தீட்சித் இருந்தார். அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தன்னார்வலராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் 2012ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஆம் ஆத்மி என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை குறி வைத்து ஒரு ஆண்டாக ஆம் ஆத்மி களப்பணியாற்றியது. 2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய பெரிய கட்சிகளுக்கு இடையே ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (Image credits-PTI)

பாஜக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அரசியல் கட்சி தொடங்கி ஒரு ஆண்டுக்குள் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது ஆட்சி அமைக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சியின் 8 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தது. அரவிந்த் கெஜ்ரிவால் 48 நாட்கள் ஆட்சியில் இருந்தார். ஊழலுக்கு எதிராக முழக்கமிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலால் டெல்லி சட்டப்பேரவையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஆட்சி கவிழ்ந்தது. எனவே ஒரு ஆண்டு குடியரசு தலைவர் ஆட்சிக்குப்பின்னர் 2015ஆம் ஆண்டு மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இரண்டாவது முறையாக வென்ற ஆம் ஆத்மி: அப்போது ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 3 தொகுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி இலவச மின்சாரம், அரசு பள்ளிகள் மேம்பாடு என பல்வேறு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தியது. இதனால் மீண்டும் 2020ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 2020 சட்டப் பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை கைப்பற்றினார்.

டெல்லி தேர்தல் வெற்றியை கொண்டாடும் பாஜக தொண்டர்கள்
டெல்லி தேர்தல் வெற்றியை கொண்டாடும் பாஜக தொண்டர்கள் (Image credits-PTI)

இதன் பின்னர் தான் ஆம் ஆத்மிக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் நெருக்கடி தரப்பட்டது. டெல்லி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மதுபான கொள்கை காரணமாக மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றது என்று பாஜக குற்றம் சாட்டியது. மதுபான உரிமையாளர்களிடம் பணம் பெற்று, அதனை கோவா தேர்தலுக்காக ஆம் ஆத்மி செலவழித்தது என்று பாஜக குற்றம் சாட்டியது. கடும் விமர்சனத்தை அடுத்து மதுபான கொள்கையை ஆம் ஆத்மி கைவிட்டது. எனினும் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய மத்திய அமைப்புகள் வழக்குகள் பதிவு செய்தன. டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா முதலில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கறைபடாத இயக்கம், அதன் தலைவர்கள் ஊழல் அற்ற தூய்மையானவர்கள் என்ற பின்பத்தை பாஜக உடைத்தது.

முறைகேடு புகார்: மதுபான கொள்கை வழக்குக்கு எதிராக ஆம் ஆத்மி கடும் சட்டப்போராட்டங்களை நடத்தி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்த மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஜாமீன் பெற்றனர். அரவிந்த கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனையில் முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், தாம் ஊழல் அற்றவர் என்று மக்கள் தீர்ப்பு கூறினால் மட்டுமே மீண்டும் முதலமைச்சர் ஆவேன் என்று கூறினார். அவருக்கு பதில் அதிஷி முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.

டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பிரச்னைகள் நேரிட்டன. கடந்த ஆண்டு கடும் குடிநீர் பஞ்சம் நிலவியது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. ஆனால், இவற்றுக்கு எல்லாம் பாஜக மத்திய அரசே காரணம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவோம் என்ற அபார நம்பிக்கையில் இருந்தது. முதலமைச்சர் வேட்பாளராக அர்விந்த் கெஜ்ரிவால், டெல்லியில் அரசு பள்ளிகளில் மேற்கொண்ட திட்டங்கள், இலவச மின்சாரம் வழங்கியது என பத்து ஆண்டுகளாக செயல்படுத்திய திட்டங்களை முன் வைத்து ஆம் ஆத்மி பிரசாரத்தில் ஈடுபட்டார். பாஜக கூட்டணியில் முதலமைச்சர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. டெல்லியில் சிறுபான்மையினர் வாக்குகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாகவே இருந்தன.

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மியின் திட்டங்கள் நிறுத்தப்படும் என்றும் ஆம் ஆத்மி பிரசாரம் மேற்கொண்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி கட்சி செயல்படுத்திய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறினர். மேலும், டெல்லி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பாஜக ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே வாக்குசாவடி அளவில் வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை மேற்கொண்டது. நுண்ணிய பிரசார யுக்தியை மேற்கொண்டதாலேயே இந்த வெற்றியை பாஜக பெற முடிந்தது என்று சொல்கின்றனர்.

ஆம் ஆத்மி வெற்றியை பறித்த காங்கிரஸ்: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்ற ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்த வரை தனித்தே போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி சார்பிலும் டெல்லியில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று அந்த கட்சியின் கடைகோடி தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை உறுதியாக இருந்தனர். டெல்லியில் இழந்த செல்வாக்கை மீட்டு விட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. ஆனால், டெல்லி யுத்தத்தில் ஆம் ஆத்மி தோல்வியை சந்தித்த நிலையில் பெரும்பாலான இடங்களில் அந்த கட்சியின் வெற்றியை தடுப்பதில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றனர்.

குறிப்பாக புதுடெல்லி தொகுதியில் வெற்றி பெற்ற பர்வேஸ் வர்மா 30088 வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 25999 வாக்குகள் பெற்றுள்ளார். இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், ஷீலா தீட்சித்தின் மகனுமான சந்தீப் தீக்ஷித் 4568 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வாக்குகளை பிரித்ததாலேயே அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்திருப்பது தெரிகிறது. அதே போல திமார்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சூரிய பிரகாஷ் 55941 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாம் இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சி 54773 வாக்குகள் பெற்றிருக்கிறது. இங்கு காங்கிரஸ் வேட்பாளர் லோகேந்தர் கல்யாண் சிங் 8361 வாக்குகள் பெற்றிருக்கிறார். இங்கும் காங்கிரஸ் ஓட்டுகளை பிரித்திருக்கிறது.

ஓட்டுகளை பிரித்த காங்கிரஸ்: இதே போல நங்லோய் ஜாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் மனோஜ்குமார் 75272 வாக்குகள் வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டாம் இடம் பிடித்துள்ள ஆம் ஆத்மி வேட்பாளர் ரகுவீந்தர் 49021 வாக்குகள் பெற்றுள்ளார். இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ரோஹித் சவுத்ரி 32028 வாக்குகள் பெற்றிருக்கிறார். இங்கு வெற்றி பெற்ற பாஜகவுக்கும், தோற்ற ஆம் ஆத்மிக்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் என்பது 26251 வாக்குகளாக இருக்கிறது. மடிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் கைலாஷ் கங்வால் 52019 வாக்குகள் பெற்றார். இங்கு தோல்வியடைந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ராகி பிர்லா 41120 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பான்வார் 17958 பெற்றார். இங்கு ஆம் ஆத்மியின் வெற்றியை தடுப்பதில் காங்கிரஸ் வேட்பாளர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். ராஜீந்தர் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் உமாங் பஜாஜ் 46671 வாக்குகள் பெற்றுள்ளார். இரண்டாம் இடம் பிடித்துள்ள ஆம் ஆத்மி 45440 வாக்குகள் பெற்றது. மூன்றாம் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சி 4015 வாக்குகள் பெற்றிருக்கிறது. இங்கும் ஆம் ஆத்மி தோல்வியடைய காங்கிரஸ் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

ஜங்புரா தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் தார்வீந்தர் சிங் மார்வா 38859 வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு இரண்டாம் இடம் பிடித்த ஆம் ஆத்மியின மணீஷ் சிசோடியா 38184 வாக்குகள் பெற்றார். மணீஷ் சிசோடியா தோல்விக்கு காரணமான காங்கிரஸ் வேட்பாளர் ஃபர்ஹத் சுரி 7350 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

கஸ்தூர்பா நகர் தொகுதியில் வென்ற பாஜக வேட்பாளர் நீரஜ் பாசோயா 38067 வாக்குகள் பெற்றிருக்கிறார். இங்கு இரண்டாம் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அபிஷேக் தத் 27019 வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை பிடித்த ஆம் ஆத்மி வேட்பாளர் ரமேஷ் 18617 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு வழி வகுத்திருக்கிறார்.

மேலும் சத்தர்பூர், சங்கம் விஹார், கிரேட்டர் கைலாஷ், திரிலோக்புரி ஆகிய தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஓட்டுகள் பிரிந்ததே காரணமாக அமைந்திருக்கிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் நின்றிருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்.

Last Updated : Feb 8, 2025, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.