தம்புள்ளை: ஆசிய மகளிர் கோப்பைக்கான டி20 போட்டி இன்று தொடங்கியது. அதன்படி, முதலில் மதியம் 2 மணி அளவில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மகளிர் அணியும், நேபாளம் மகளிர் அணியும் மோதின. அதில் நேபாளம் மகளிர் அணி வெற்றி பெற்றது.
பின்னர் மாலை 7 மணி அளவில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அணியில் தொடக்க வீரர்களாக முனீபா அலி - குல் பெரோசா ஜோடி களமிறங்கியது. வந்த வேகத்தில் வெறும் 5 ரன்களுக்கு குல் பெரோசா ஆட்டமிழந்தார். சித்ரா அமீன் களமிறங்கி பவுண்டரிகளை விளாசி அணிக்கு ரன்களைக் குவித்தார்.
இதற்கிடையில், முனீபா அலி அவுட் ஆக, அலியா ரியாஸ், நீடா ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க ஹாசன் களம் கண்டு அணிக்கு ரன்களைக் குவித்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணற, 15 ஓவர் முடிவிற்கு 81 - 6 என விளையாடியது.
பாகிஸ்தான் அணியில் பாத்திமா சனா 22 ரன்கள் குவித்தார். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அவுட் ஆக 19.2 ஓவர் முடிவிற்கு 108 ரன்களைக் குவித்தது. இதில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரேணுகா சிங், பூஜா வஸ்தகர், ஸ்ரேயங்கா பாட்டீல் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
109 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய மகளிர் அணி. அதன்படி, தொடக்க வீரர்களாக ஷவாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவித்தனர். 7வது ஓவரில் ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகளை விளாசினார்.
9வது ஓவரில் ரியாஸ் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் ஸ்மிருதி அவுட் ஆக, ஹேமலதா களம் கண்ட வேகத்தில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். அவரும் அவுட் ஆக, ஜெமிமா - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி விளையாட இந்திய மகளிர் அணி 14.1 ஓவர் முடிவிற்கு வெற்றி பெற்றது. இதில் அதிரடியாக ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும், ஷவாலி வர்மா 40 ரன்களும் எடுத்து அசத்தினர். சையதா அரூப் ஷா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:" 7 வயதில் தொடங்கிய விடாமுயற்சி " செஸ் பலகையின் அறிமுகம் பகிரும் விஸ்வநாதன் ஆனந்த் - International Chess day