நைஜீரியா: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசியின் 20 ஓவர் ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்பிரிக்க துணை கண்ட தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் சி பிரிவு ஆட்டத்தில் நைஜீரியா - மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த ஐவரி கோஸ்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் சலீம் சாலு (112 ரன்) அபாரமாக விளையாடி சதம் அடித்தார். மற்றொரு வீரர் ஐசக் 65 ரன்கள் குவித்தார். இருவரது அபார ஆட்டத்தின் மூலம் நைஜீரியா அணி 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
A 264-run win for the hosts on matchday two of the #T20AfricaMensWCQualifierC.
— ICC Africa (@ICC_Africa_) November 24, 2024
Nigeria 271/4 in 20 overs, Ivory Coast 7/10 in 7.3 overs
Full match details: https://t.co/s8EkObxse8 https://t.co/nMJpD1fhDN pic.twitter.com/tsghd4f9zm
தொடர்ந்து விளையாடிய ஐவரி கோஸ்ட் அணி அவ்வளவு பலவீனமானதா அல்லது நைஜீரியா அணி பலம் வாய்ந்ததா என்று தெரியாத நிலை காணப்பட்டது. நைஜீரியா பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த ஐவரி கோஸ்ட் அணி 7.3 ஓவர்கள் முடிவில் 7 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
ஐவரி கோஸ்ட் அணியில் 6 வீரர்கள் டக் அவுட்டாகினர். தொடக்க வீரர் ஊட்டாரா முகமது அதிகபட்சமாக 4 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து மிமி அலெக்ஸ், விக்கெட் கீப்பர் மைகா இப்ராஹிம், டிஜே கிளாட் ஆகியோர் தலா 1 ரன் குவித்தனர். மற்ற வீரர்கள் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
Nigeria has posted a huge total of 271/4 in 20 overs against Ivory Coast.
— ICC Africa (@ICC_Africa_) November 24, 2024
Ivory Coast needs 272 runs from 20 overs to win.
Watch the second innings live on https://t.co/x310mcloFO.#T20AfricaMensWCQualifierC https://t.co/HldfZcD6wU pic.twitter.com/eVStYBeOyA
இதனால் நைஜீரியா அணி 264 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் மிக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை ஐவரி கோஸ்ட் அணி பெற்றது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அண்மையில் தான் இணைந்தது மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி கோஸ்ட் உஸ்பெகிஸ்தான் மற்றும் கனடாவுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினர் அந்தஸ்தை பகிர்ந்து கொண்டுள்ளது.
20 ஓவர் ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்பிரிக்க துணை கண்ட தகுதிச் சுற்று போட்டிகள் தான் ஐவரி கோஸ்ட் அணிக்கு முதல் சர்வதேச அனுபவமாகும். முன்னதாக மங்கோலியா அணியை 10 ரன்களில் சிங்கப்பூர் அணி சுருட்டி இருந்தது. மகளிர் பிரிவில் மாலத்தீவு - மாலி இடையிலான போட்டி 6 ரன்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL Auction: இலங்கை தமிழ் வீரர் அன்சோல்டு! யார் தெரியுமா? முழு லிஸ்ட் இங்கே!