ஜெட்டா: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாளை காட்டிலும் இராண்டாவது நாளில் வீரர்களுக்கான கிராக்கி என்பது பெரிய அளவில் காணப்படவில்லை. சில பெரிய வீரர்களும் அன்சோல்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமாரை அதிகபட்சமாக 10 கோடியே 75 லட்ச ரூபாய்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விலைக்கு வாங்கியது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை 3 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய ஆல் ரவுண்டர் குர்ணால் பாண்ட்யாவை 5 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கைப்பற்றியது.
மும்பை அணியில் தீபக் சஹர்!#etvbharat #etvbharattamil #IPLAuction2025 #ipl2025auction #ipl #ipl2025 #iplmegaauction pic.twitter.com/ojrt7YHJjX
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) November 25, 2024
இலங்கை தமிழர் கிரிக்கெட் வீரரான விஜய்காந்த் வியாஸ்காந்த் எந்த அணியும் வாங்காத நிலையில் அன்சோல்டு வீரராக அறிவிக்கப்பட்டார். அதேபோல், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், அஜிங்ய ரஹானே, பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் ஆகியோரும் அன்சோல்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.
மற்றொரு இந்திய வீரர் தீபக் சஹருக்கு கடும் போட்டி நிலவியது. அடிப்படைத் தொகையான 2 கோடி ரூபாயில் களமிறங்கிய தீபக் சஹரை ஏலம் எடுப்பதில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 9 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு தீபக் சஹரை மும்பை அணி தன்வசமாக்கியது.
இலங்கை தமிழ் வீரர் அன்சோல்டு! #etvbharat #etvbharattamil #IPLAuction2025 #ipl2025auction #ipl #ipl2025 #iplmegaauction pic.twitter.com/WbjoZjVKJK
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) November 25, 2024
இந்திய பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பை 8 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியது. நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசனை 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்பரை 4 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
பெங்களுரூ அணியில் புவனேஷ்வர் குமார்!#etvbharat #etvbharattamil #IPLAuction2025 #ipl2025auction #ipl #ipl2025 #iplmegaauction pic.twitter.com/qPk7l3eQHm
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) November 25, 2024
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் அகேல் ஹொசைன், இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ் ஆகியோர் அன்சோல்டு வீரர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: IPL 2025 Auction: 2வது நாளில் சோல்டு, அன்சோல்டு வீரர்கள் முழு விபரம்!