கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
கடந்த 27ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
எப்ப போட்டி தொடங்கும்?:
இதுவரை வங்கதேசம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. கான்பூரில் அதிகாலை முதலே லேசான மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மழையின் அளவு சற்று குறைந்து காணப்படும் நிலையில், மைதானத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஐசிசி மற்றும் போட்டி நடுவர் மைதானத்தின் ஈரப்பதம் மற்றும் தண்ணீர் தேங்கி உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மேற்கொண்டு மழை பெய்யாத நிலையில் 12 மணிக்கு மேல் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த அப்டேட்: