தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவுக்கு 95 ரன்கள் இலக்கு! வெற்றி யாருக்கு? - Ind vs Ban 2nd Test Cricket

Ind vs Ban 2nd Test Cricket: 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 95 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசம் நிர்ணயித்துள்ளது.

Etv Bharat
Indian Team (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 1, 2024, 12:27 PM IST

கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடைசி நாளில் இராண்டவது இன்னிங்சில் வங்கதேசம் அணி ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் கைப்பற்ற வேண்டும் என்றால் மாலைக்குள் இந்திய அணி 95 ரன்களை எடுக்க வேண்டும்.

2வது டெஸ்ட் கிரிக்கெட்:

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 27ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் நாளில் வங்கதேசம் அணி 35 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து 2 மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் தொடர் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன. இந்நிலையில் நேற்று (செப்.30) நான்காவது நாளில் மீண்டும் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸ்:

தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி அடித்து ஆடியது. டி20 கிரிக்கெட் போன்று டெஸ்ட் போட்டியை அடித்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (72 ரன்), விராட் கோலி (47 ரன்), கே.எல். ராகுல் (68 ரன்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் அணி 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் குவித்து இருந்தது. தொடர்ந்து இன்று (அக்.1) 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்தியா வெற்றி வாய்ப்பு?:

ஐந்து மற்றும் கடைசி நாளில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, இந்திய சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சில் வங்கதேச வீரர்கள் கடுமையாக திணறினர். முதல் இன்னிங்சில் நாட் அவுட் சதம் விளாசிய மொமினுல் ஹக் 2வது இன்னிங்சில் 2 ரன்னில் அஸ்வின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முஸ்பிகுர் ரஹிம் (37 ரன்) மட்டும் கடைசி வரை அணியை காப்பாற்ற போராடினார். இறுதியில் வங்கதேம் அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் ஜபிரீத் பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி இன்று மாலைக்குள் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.

இதையும் படிங்க:நூற்றாண்டு கிரிக்கெட்டில் இதுதான் முதல் முறை! தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து வரலாறு! - Ireland Historic Win south africa

ABOUT THE AUTHOR

...view details