தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து! 100வது டெஸ்ட் நாயகன் அஸ்வின், குல்தீப் அபாரம்! - Ind Vs Eng 5th Test

Ind Vs Eng 5th Test: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Ind Vs Eng 5th Test
Ind Vs Eng 5th Test

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 5:26 PM IST

தர்மசாலா : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்த 4 ஆட்டங்களில் இந்திய அணி 3-க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று (மார்ச்.7) தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சை ஷேக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் தொடங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. பென் டக்கெட் 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்து களமிறங்கிய ஓலி போப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 11 ரன்கள் ஆட்டமிழந்து நடையை கட்டினார். இதனிடையே 79 ரன்கள் குவித்து நல்ல நிலையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் ஷேக் கிராவ்லி குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் இங்கிலாந்து அணியின் விக்கெட் வரிசை சீட்டு கட்டுபோல் சரியத் தொடங்கின.

பெரிதும் எதிர்பார்த்த ஜோ ரூட் 26 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். ஜானி பெர்ஸ்டோவ் 29 ரன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட், விக்கெட் கீப்பர் போக்ஸ் 24 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.

57 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய சுழலில் இங்கிலாந்து அணி சின்னா பின்னமாகி போனது. சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், 100வது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் வீழத்தினர்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா 52 ரன்னும், சுப்மன் கில் 26 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட 83 ரன்கள் இந்திய அணி பின்தங்கி உள்ளது.

இதையும் படிங்க :ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு? பிசிசிஐ தகவல்!

ABOUT THE AUTHOR

...view details