செயின்ட் லுசியா: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன்.24) செயின்ட் லுசியாவில் நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியில் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ரோகித் சர்மா ஜோடி களமிறங்க முதல் ஓவரின் 3வது பந்தில் ரோகித் சர்மா தனது பவுண்டரியை விளாசினார்.
ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசிய விராட் கோலி, டிம் டேவிட் கேட்ச் பிடித்ததால் ஆட்டமிழந்தார். இந்தியாவிற்கான பெரிய விக்கெட் சரிய, ரிஷப் பண்ட களம் கண்டார். இருவரும் ஜோடி போட்டு விளையாடினர்.
3வது ஓவரில் ரோகித் சர்மா 4 சிக்ஸ், 1 பவுண்டரியை விளாசி அணிக்கு ரன்களை குவித்தார். அடுத்த இரு ஓவர்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரை சதத்தை பதிவு செய்தார். 5 ஓவர் முடிவிற்கு 52 - 1 என்ற கணக்கில் விளையாடியது. 8வது ஓவரில் ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் களம் கண்டார். அதிரடியாக விளையாடிய ரோகித் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் போல்டானார். 41 பந்துகளுக்கு 92 ரன்களை குவித்தார் ரோகித் சர்மா.