சென்னை : சென்னையில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்னுடன் இந்திய அணி களத்தில் இருந்தது. 2வது நாளில் களமிறங்கிய இந்திய அணி தரப்பில் ஜடேஜா 86 ரன்னுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 102 ரன்களுடன இன்றுஆட்டத்தை தொடர்ந்தனர்.
ரவீந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் கூடுதலாக 11 ரன் எடுத்து 113 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் 35 ரன்னுக்குள் 4 விட்கெட்டுகளை இழந்து 376 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனர்.
பின்னர் வங்கதேச அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரராக ஷத்மன் இஸ்லாம் மற்றும் ஜாகீர் ஹசன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். வங்கதேச வீரர்களில் கேப்டன் சாண்டோ, ஷகிப், லிட்டன் தாஸ், மெஹைடி ஹாசன் ஆகியோர் மட்டும் நிலைத்து நின்று தங்களது அணிக்கு ரன்களை குவித்தனர். பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி திணறியது.
இதையும் படிங்க :India vs Bangladesh test: 376 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்.. 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்கதேச அணி! - India vs Bangladesh test
வங்கதேச அணி 47.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இதுவரை 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்ற பெயரை பெறுகிறார்.
மேலும் சிராஜ், ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக ஷகிப் 32 ரன்களும், மெஹிதி ஹசன் 27 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் - ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 7 பந்துகளுக்கு, 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜெய்ஸ்வால் 17 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழ்ந்தார்.
களத்தில், விராட் கோலி சிறப்பாக ஆடிய நிலையில் 37 பந்துகளுக்கு 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் சுப்மன் கில் - ரிஷப் பண்ட் ஜோடி களமிறங்கி, வங்கதேச அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். இரண்டாம் நாள் முடிவில், சுப்மன்கில் 64 பந்துகளுக்கு 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 13 பந்துகளுக்கு 12 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி 23 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன் எடுத்தது. இந்திய அணி 308 ரன்கள் முன்னிலையில் உள்ளது.