ஐதராபாத்:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றுள்ளது. வெறும் வெற்றியை மட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி பெர்த் மைதானத்தில் மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சிறப்பை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 222 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதே இந்திய அணியின் முந்தைய சாதனையாக உள்ளது.
அதன் பின் 2018ஆம் ஆண்டு இதே மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று இருந்தது. ஆனால் தற்போது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிக ரன் வித்தியாச வெற்றிகள்:
ஆப்டஸ், பெர்த் - 295 ரன்கள் - நவம்பர் 25, 2024,
மெல்போர்ன் - 222 ரன்கள் - 30 டிசம்பர் 1977,
மெல்போர்ன் - 137 ரன்கள் - 26 டிசம்பர் 2018,
பெர்த் - 72 ரன்கள் - 16 ஜனவரி 2008,
மெல்போர்ன் - 59 ரன்கள் - 7 பிப்ரவரி 1981.
அதேநேரம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இரண்டாவது போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இதே ஆஸ்திரேலிய அணியை 320 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று இருந்தது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக 1977ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி இருந்தது. இந்நிலையில், 295 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 3வது முறையாக வீழ்த்தி இருக்கிறது. இந்தியா அணி பெற்ற மூன்று அதிக ரன் வித்தியாச வெற்றி அனைத்தும் ஆஸ்திரேலியாவுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் அதிக ரன் வித்தியாச வெற்றிகள்:
மொஹாலி - 320 ரன்கள் - 17 அக்டோபர் 2008,