ETV Bharat / state

சட்டப்பேரவையில் ஒலித்த அண்ணா பல்கலை., விவகாரம்: கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதம்! - TAMIL NADU ASSEMBLY 2025

சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒலித்த அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - கோப்புப் படம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒலித்த அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 20 hours ago

சென்னை: சட்டப்பேரவை விதி 5-ன் கீழ் பேரவை உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை 2025-இன் முதல் கூட்டத்தொடரின், மூன்றாம் நாளான இன்று அதிமுக எம்எல்ஏக்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். மேலும், டங்ஸ்டன் தடுப்போம், மேலூரைக் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய முகக்கவசத்தை அணிந்து வந்திருந்தனர். இதனையடுத்து தொடங்கிய கேள்வி நேரத்தில், பேரவை உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எதிர்கட்சியான அதிமுக ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன கொண்டுவந்தன. தொடர்ந்து இதன் மீதான விவாதம் தொடங்கியது.

அரசு பொறுப்பேற்க வேண்டும்: எம்.ஆர். காந்தி

அண்ணா பல்கலைகழக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவியின் சம்பவத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 'யார் அந்த சார்?' என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு இருக்கிறது. யார் அந்த சார் என்பதை கண்டுபிடிப்பதோடு மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பதிவாளர் மீது நடவடிக்கை வேண்டும்: பூவை ஜெகன் மூர்த்தி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்பது தெரிய வேண்டும். பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளுநர் தான் பொறுப்பு! - த.வா.க., வேல்முருகன்

எப்படி முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆளுநர் வரைமுறைகுட்பட்ட வளாகத்தில் நடந்த சம்பவத்தில் ஆளுநர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். அதற்கும் ஆளுநருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்பதை நிரூபிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈ.ஆர்.ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:

அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் யார் அந்த சாராக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சதன் திருமலைக்குமார், ம.தி.மு.க:

உரிய தண்டனை பெற்று தர காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதற்கு முழுமையாக ஆளுநர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மாரிமுத்து, அதிர்ச்சியாக உள்ளது; சட்டப்பிடியில் இருந்து யாரும் தப்பிக்கக் கூடாது என்று பேசினார்.

நாகை மாலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி பேசுகையில் தொழில்நுட்ப கோளாறால் எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) வெளிவந்தது என்பதை ஏற்க முடியாது. கடும் பாதிப்புக்கு உள்ளான அந்த பெண்ணிற்க்கு நீதிமன்ற கூறிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.

சிந்தனை செல்வன், விசிக

ஆளுநர்தான் முழுமையாக இதற்கு பொறுப்பு. பல்வேறு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. கல்வி நிலையங்களில் தாக்குதல் நடைப்பெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக நிர்வாகம் பாதிக்கப்கடுவதற்க்கு ஆளுநர் தான் காரணம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராடுபவர்களை கைது செய்யக்கூடாது: பா.ம.க., ஜி.கே.மணி

அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் கைது மட்டும் போதாது. அந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை. கல்லூரி, பள்ளி வளாகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் காவலர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வில் போராட்டம் நடத்த அனைத்து கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. அதற்கு மாறாக போராட்டம் செய்பவர்களை கைது செய்ய கூடாது அதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், "போராட்டம் நடத்த அனுமதி வாங்க வேண்டும். அதற்குரிய இடங்களில் தான் காவல்துறை அனுமதி தரும். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் வழக்குப் பதிவு செய்யப்படும். போராட்டம் நடத்துவதில் பாகுபாடு இல்லை," என்றார்.

தொடர்ந்து பேசிய மணி, மாணவர்கள் கஞ்சா போன்ற போதை பொருள்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

வாக்கு வங்கி அரசியல் வேண்டாம்: காங்கிரஸ் செல்வப்பெருந்தகை

பாலியல் வன்கொடுமை மனித குலத்தில் யாரும் ஏற்க முடியாது. மாணவி விவகாரத்தை வாக்கு வங்கி அரசியல் ஆக்க கூடாது. தொலைபேசியில் யாரிடம் அவர் பேசினார் என்பதை பாஜக தான் வெளியிட வேண்டும். அவர்களது கட்டுப்பாட்டில் தான் தொலைதொடர்புதுறை உள்ளது. யார் அந்த சார் காரணம் கேட்கிறார்கள். அண்ணா நகர் பாலியல் விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளர் நேற்றைய தினம் கைது செய்யபட்டுள்ளார். அவருடன் வேறு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, யார் அந்த சார் என்று கேட்டு அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது.

இதை கூறிய உடன் அ.தி.மு.க-வினர் எழுந்து குரல் எழுப்பினர். இதனால் சில நிமிடம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் மனுநீதி ஆட்சி - அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் மனுநீதி ஆட்சி நடைப்பெற்று கொண்டிருக்கிறது. யாரை பற்றியும் பேசலாம். இதைபற்றி பேசக்கூடாது; அதை பற்றி பேசக்கூடாது எனக் கூற முடியாது. ஆனால் தவறாகவோ; உண்மைக்கு மாறாக பேசக்கூடாது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்! - அ.தி.மு.க., ஆர்.பி. உதயகுமார்

அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர் என கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக சந்தேகம் எழும்புகிறது. அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் தி.மு.க-வினர் கைது செய்யப்படவில்லை.

முதலமைச்சர் பதில்: அனுமதி இல்லாத இடத்தில் போராட்டம் நடத்தியதால் கைது நடவடிக்கை.

அமைச்சர் பொன்முடி:

அதிமுக ஆட்சி காலத்தில் திமுக நடத்திய போராட்டத்திலும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய உதயகுமார் ஆளும் கட்சி சட்டத்தை வளைக்காதீர்கள் என்று கூறினார்.

பேரவைத் தலைவர் அப்பாவு: அனுமதி இல்லாத இடத்தில் போராட்டம் நடத்தினால் கைது என முதலமைச்சர் கூறிவிட்டார். நீங்கள் மனசாட்சியைத் தொட்டு பேச வேண்டும்.

உதயகுமார்:

வளாகத்தில் உள்ளே ஒரு குற்றவாளி சர்வசாதாரணமாக எப்படி போக முடியும்.

பேரவைத் தலைவர் அப்பாவு: மூன்று பெண் ஐ.பி.எஸ் அலுவலர்கள் தலைமையில் சிறப்பு விசாரணை நடைப்பெறுகிறது என கூறி இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் எடுக்காமலும், முதலமைச்சர் பதில் கூறாமலும் இருந்திருக்கலாம். ஆனால், அப்படி இல்லாமல் கவன ஈர்ப்பு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது முதலமைச்சரை குறை சொல்லக்கூடாது.

உதயகுமார்:

யாரை காப்பற்ற ஒரே ஒரு குற்றவாளிதான் இதில் தொடர்புடையவர் என காவல் அதிகாரி ஏன் கூறினார். யாரை காப்பற்ற கூறினார் இந்த சந்தேகம் எழும்புகிறது. உண்மை குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கும் வரை தொடர்ந்து அதிமுக போராட்டம் நடத்தும் என எடப்பாடி கூறியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்:

டெல்லி, மும்பை, கொல்கத்தா என எல்லா இடங்களிலும் நடக்கவில்லையா? பொள்ளாச்சியில் நடக்கவில்லையா? அனைத்து ஆட்சியிலும் சட்டத்தை மீறுபவர்கள் உள்ளார்கள்.

உதயகுமார்:

பொள்ளாச்சி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அப்போது கூறியிருந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.