ETV Bharat / entertainment

ஜனவரி மாத இறுதியில் வெளியாகுமா விடாமுயற்சி? - VIDAAMUYARCHI RELEASE

Vidaamuyarchi release plans: அஜித்குமார் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் ஜனவரி மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி போஸ்டர்ஸ்
விடாமுயற்சி போஸ்டர்ஸ் (Photo: Film posters)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 8, 2025, 12:40 PM IST

சென்னை: அஜித்குமார் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் ’துணிவு’ திரைப்படம் வெளியானது. இதனைத்தொடர்ந்து அஜித் விடாமுயற்சி மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பின் போது பல தடைகளை சந்தித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக குட் பேட் அக்லி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

அஜித் படம் மூன்று வருடங்களுக்கு பிறகு வருகிறது என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்த நிலையில், புத்தாண்டு ட்ரீட்டாக விடாமுயற்சி டிரெய்லர் வரும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நடந்தது வேறு, லைகா புரொடக்‌ஷன்ஸ் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் நடிகர் அஜித்தை சமூக வலைதளத்தில் அஜித் ரசிகர்களே வசை பாடினர். புத்தாண்டு அதுவுமாக விட வேண்டிய அப்டேட் இதுவா என ரசிகர்கள் கொந்தளித்தனர். விடாமுயற்சி தள்ளிப் போகும் என முன்பே அறிவித்திருந்தால் ’குட் பேட் அக்லி’ திரைப்படமாவது திட்டமிட்டப்படி வெளியாகியிருக்கும் எனவும் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: நடிகர் யாஷ் பிறந்தநாள்: ’டாக்சிக்’ படத்தின் மிரட்டலான க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு! - TOXIC MOVIE UPDATE

விடாமுயற்சி திரைப்பட வெளியீடு தள்ளிப் போனதற்கு அப்படம் breakdown படத்தின் ரீமேக் எனவும், அப்படக்குழுவினரிடம் ரீமேக் உரிமையை பெறவில்லை என சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. அதே நேரத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது விடாமுயற்சி திரைப்படத்தை ஜனவரி மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.