பெர்த்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 104 ரன்களுக்கு சுருண்டது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (161 ரன்), விராட் கோலி (101 ரன்), கே.எல். ராகுல் (77 ரன்) ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணி 500 ரன்களை கடக்க உறுதுணையாக இருந்தனர். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
முதன் இன்னிங்சில் உள்ள 46 ரன்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு 533 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.
3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து இன்று (நவ.25) நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில், இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.
ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட் (89 ரன்) மற்றும் சிறிது நேரம் நீடித்த நிலையில், மற்ற வீரர்கள் அவசர கதியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 58.4 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், நிதிஷ் ரெட்டி, ஹர்சித் ரானா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நீண்ட கால கிரிக்கெட் வரலாற்றில் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக தோல்வியை தழுவி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பெதொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தொடங்குகிறது.
இதையும் படிங்க:புலம்பும் ஐதராபாத்.. திட்டம் போட்டு வாங்கிய டெல்லி... நடராஜனை வைத்து மாஸ்டர் பிளான் போடும் ஹேமங் பதானி!