தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியா- கனடா ஆட்டம் ரத்து! மழையால் டாஸ் கூட போடவில்லை! - Ind vs Can T20 World cup 2024 - IND VS CAN T20 WORLD CUP 2024

மழை காரணமாக இந்தியா - கனடா இடையிலான லீக் ஆட்டத்தில் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Etv Bharat
Wet Ground File Picture (IANS Photo)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 7:53 PM IST

Updated : Jun 15, 2024, 9:27 PM IST

புளோரிடா: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் 33வது லீக் ஆட்டத்தில் இந்தியா - கனடா அணிகள் இன்று (ஜூன்.15) பலப்பரீட்சை நடத்த இருந்தன.

புளோரிடாவில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை கொட்டி வருவதால் இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவியது. அதேபோல் இன்று புளோரிடாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

நீண்ட நேரமாகியும் ஆடுகளத்தில் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன.

ஏற்கனவே குருப் ஏ பிரிவில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கனடா இழந்தது. அதனால் இன்றைய ஆட்டம் மற்ற ஆட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

இதையும் படிங்க:ஐந்தே ஓவர்களில் முடிந்த மேட்ச்.. உகாண்டாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி! - T20 World Cup 2024

Last Updated : Jun 15, 2024, 9:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details