தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒரே அணியில் விராட் கோலி, பாபர் அசாம்! 17 ஆண்டுகளுக்கு பின் ஒரு போட்டி! - AFRO ASIAN CRICKET CUP

இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து ஒரே அணியில் விளையாட உள்ள போட்டி ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Virat Kohli - Babar Azam (AP)

By ETV Bharat Sports Team

Published : Nov 6, 2024, 2:51 PM IST

ஐதராபாத்: 17 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய - ஆப்ரோ கிரிக்கெட் தொடர் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த லெவன் அணி நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் ஆசிய - ஆப்ரோ கிரிக்கெட் தொடர் முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது.

தொடர்ந்து 2007ஆம் ஆண்டு ஆசிய - ஆப்ரோ கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தியது. அதன்பின் நீண்ட நாட்கள் இந்த விளையாட்டு தொடர் நடைபெறாமலேயே இருந்தது. இந்நிலையில், ஏறத்தாழ 17 ஆண்டுகளிகளுக்கு பின்னர் மீண்டும் ஆசிய - ஆப்ரோ கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஆசிய - ஆப்ரோ கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரை செய்தது. மேலும், அமைப்பின் நிதி பற்றாக்குறையை தொடரை நடத்துவதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும், ஆசிய - ஆப்ரோ தொடரை நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

ஆசியா தரப்பிலான அணியில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களும், ஆப்பிரிக்க அணியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகளை சேர்ந்த வீரர்களும் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்கு பின் விராட் கோலி, பாபர் அசாம் உள்ளிட்டோர் ஒரே அணியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடந்து ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு நாடுகளும் நேருக்கு நேர் விளையாடி வருகின்றன. கடைசியாக 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய - ஆப்ரோ கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணி வீரர்கள் ஒன்றாக விளையாடினர்.

2005ஆம் ஆண்டு ஆசிய அணியில் பாகிஸ்தான் சார்பில் இன்சாமாம் உல் ஹக், இந்தியா தரப்பில் விரேந்தர் சேவாக், ஜாகீர் கான், அனில் கும்பிளே, ஆஷிஷ் நெஹ்ரா, ராகுல் டிராவிட் ஆகியோர் விளையாடி இருந்தனர். தொடர்ந்து 2007ஆம் ஆண்டு மஹலே ஜெயவர்தனே தலைமையிலான ஆசிய அணியில் எம்.எஸ்.தோனி, சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங், விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான் ஆகியோர் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஆப்கானிஸ்தான் வீரர்களும் அணியில் இடம் பெறுவார்கள் என்பதால் தேர்வு என்பது சற்று கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியா தொடருன் ஓய்வு பெற திட்டமிடும் 3 இந்திய ஜாம்பவான்கள்? தமிழக வீரருக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்!

ABOUT THE AUTHOR

...view details