தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடத்த இத்தனை கோடியா? அநியாயம் பண்றீங்கடா? - Champions Trophy 2025 - CHAMPIONS TROPHY 2025

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒதுக்கி உள்ள நிதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Champions Trophy (Getty Images)

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 6:30 PM IST

ஐதராபாத்:பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரை நடத்த இந்திய மதிப்பில் 547 கோடி ரூபாயை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிதி ஒதுக்கி உள்ளது. அண்மையில் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்ற ஐசிசியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு 547 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவது இறுதி செய்யப்பட்டது.

பிப்ரவரி 19 தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி கராச்சியில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நடைபெறுகிறது. மார்ச் 9ஆம் தேதி லாஹூரில் இறுதி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மழை உள்ளிட்ட பேரிடர் காரணமாக போட்டி தடைபட்டால் மறுநாள் ரிசர்வ் டே ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் ராவல்பிண்டியில் சில ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுவதால் அதில் இந்தியா பங்கேற்குமா என்பது தொடர் கேள்வியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்வது குறித்து பிசிசிஐ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியானது முதல் ஐசிசியிடம், இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு பதிலாக வேறொரு நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துமாறும் அல்லது இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டுமாவது பாகிஸ்தானுக்கு வெளியே பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என பிசிசிஐ தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அதேநேரம், பயணத் தடை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வர மறுக்கிறதா என்பது குறித்து பிசிசிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. அதேநேரம், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

வரைவு போட்டி அட்டவணை கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இறுதி கட்டத்தில் பாகிஸ்தானில் விளையாடுவதை இந்தியா தவர்ப்பது சற்று கடினம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் தலைமையேற்று நடத்தியது. அப்போதும் இதே போன்று பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டன.

இதையடுத்து இந்திய விளையாடும் ஆட்டங்கள் ஹைபிரிட் மாடலில் இலங்கையில் நடத்தப்பட்டன. அதேபோல் இந்த முறையும் விலக்கு பெற பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான போட்டிகளை நடத்த 35 மில்லியன் அமெரிக்கா டாலர் நிதியாக ஐசிசி ஒதுக்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து பங்கேற்கும் நாடுகள் மற்றும் வெற்றி பெறும் நாடுகளுக்கு பரிசுத் தொகையாக 20 மில்லியன் அமெரிக்க டாலர், தொலைக்காட்சி உள்ளிட்ட உற்பத்தி செலவுகளுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் என தனித்தனியாக ஐசிசி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் ஆட்டம் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் வகையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் வரைவு அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேபோல் பிப்ரவ்ரி 20ஆம் தேதி வங்கதேசம், 23ஆம் தேதி நியூசிலாந்து என மற்ற அணிகளுடன் இந்தியா மோதும் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபிக்கு கடுமையாக தயாராகி வரும் பாகிஸ்தான் அணி அதற்கு முன்னதாக நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கால்இறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி! வரலாறு படைத்தது! - paris olympics 2024

ABOUT THE AUTHOR

...view details