அமெரிக்கா:20 அணிகள் பங்கேற்று நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது, ஆரம்பமே பல்வேறு டிவிஸ்ட்களை கொடுத்து வருகிறது. காரணம், கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான்களாக இருந்த அணிகளை கத்துக்குட்டி அணிகள் வீழ்த்தி சாதனை படைத்து வருகிறது.
முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா. அதேபோல், சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க அயர்லாந்து அணியை வீழ்த்தியது கத்துக்குட்டி அணியான கனடா. அதேபோல், இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி.
அந்த வரிசையில், தற்போது இலங்கை அணியும் இணைந்துள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, வங்கதேசம் அணியின் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் திணறியது.
இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் தட்டுத்தடுமாறி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிசன்கா 47 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய பங்களாதேஷ் அணியில் முஸ்தபிசூர், ரிஷாத் ஹூசைன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.