தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2023ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 அணியை அறிவித்த ஐசிசி.. கேப்டனாக இந்திய வீரர் தேர்வு! - ரவி பிஷ்னோய்

2023 ICC Best T20 Team: 2023ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் பெண்களின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 9:14 PM IST

துபாய்: 2023ஆம் ஆண்டுக்கான டி20 அணியை ஐசிசி இன்று (ஜன.22) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் டி20 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பெளலிங்கில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து 11 பேர் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

இதில் கடந்த ஆண்டு டி20 போட்டியில் 733 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவ் இந்த அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சூழல் பந்து வீச்சில் ரவி பிஸ்னோய்யும், வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 2 ஜிம்பாவே வீரர்களும், இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா ஆகிய அணிகளில் இருந்து தலா 1 வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆண்கள் அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), பில் சால்ட் (இங்கிலாந்து), நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர், வெஸ்ட் இண்டீஸ்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன், இந்தியா), மார்க் சாம்ப்மென் (நியூசிலாந்து), சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே), அல்பேஷ் ராம்ஜனி (உகாண்டா), மார்க் அடெய்ர் (அயர்லாந்து), ரவி பிஸ்னோய் (இந்தியா), ரிச்சர்ட் ந்க்வாரா (ஜிம்பாப்வே), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).

பெண்கள் அணியில் ஒரே ஒரு இந்திய வீராங்கனையாக தீப்தி சர்வா மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அதிகபட்சமாக 4 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக இங்கிலாந்து அணியில் இருந்து 2 வீராங்களைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மற்ற அணிகளான வெஸ்ட் இண்டீஸ், தென் அப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளில் இருந்து தலா 1 வீராங்கனைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஆண்டு 15 சிக்சர்கள் உட்பட மொத்தம் 470 ரன்களை குவித்த இலங்கை அணியை சேர்ந்த அத்தப்பத்தி கேப்டனாக தேர்வாகி உள்ளார்.

பெண்கள் அணி விவரம்: சமாரி அத்தபத்து (கேப்டன், இலங்கை), பெத் மூனி (விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலியா), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), ஹேலி மேத்யூஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நாட் ஸ்கிவர் - பிரண்ட் (இங்கிலாந்து), அமெலியா கெர் (நியூசிலாந்து), எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா), தீப்தி சர்மா (இந்தியா), சோபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), மேகன் ஷட் (ஆஸ்திரேலியா).

இதையும் படிங்க:இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்!

ABOUT THE AUTHOR

...view details