தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"500 விக்கெட்கள் சாதனையை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்"- அஷ்வின் உருக்கம்! - Ashwin 500

Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 9:01 PM IST

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று (பிப்.15) தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இன்று (பிப்.16) 445 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து பந்து வீசி வருகின்றது.

499 விக்கெட்களுடன் இருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார்.

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது வீரர், குறைந்த பந்துகளில் 500 விக்கெட்களை கைப்பற்றிய வீரர், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய 9வது வீரர் மற்றும் அதிக டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய 2வது இந்திய வீரர் என்ற பல்வேறு சாதனைகளை தன்வசமாக்கியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இது ஒரு நீண்ட பயணம். முதலில் இந்த சாதனையை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். என்னுடைய இந்த நீண்ட கிரிக்கெட் பயணத்தில் எப்போதும் என் பக்கம் நின்றுள்ளார். ஒவ்வொரு முறை நான் விளையாடும் போதும் அவருக்கும் நெஞ்சு வலியே வந்துவிடும். என் ஆட்டத்தை பார்த்து அவரது உடல் நிலை சற்று ஏற்ற இறக்கமாகதான் இருக்கும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இங்கிலாந்து அணியின் வீரர்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள். அவர்கள் ஒடிஐ, டி20 போல் அனுகுகின்றனர். எங்களை அதிகம் சிந்திக்க வைக்கின்றனர். நாங்கள் எங்கள் கையில் இருக்கும் திட்டத்தை தொடர்ந்து சரியாக செயல்படுத்த விரும்புகிறோம். இந்த பிட்ச் முதல் மூன்று நாட்களுக்கு பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும். 5வது நாள் கடினமாக மாறும்.

ஆட்டமானது இப்போது வரை சமநிலையில்தான் இருக்கின்றது. அவர்கள் எங்கள் மீது அழுத்தம் ஏற்ற நினைக்கின்றனர். ஆனால் பக்குவமாக செயல்பட்டு ஆட்டத்தை கையில் இருந்து நழுவவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் - சாதனை படைத்த அஷ்வின்!

ABOUT THE AUTHOR

...view details