அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு நாள் கொண்ட டி20 போட்டியில் விளையாடியது. முதல் நாளில், ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. அதன்படி இரண்டாவது டி20 போட்டி நேற்று(பிப்.11) நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் டி20 போட்டியில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆட, அடுத்தடுத்து சரிவுகளைக் கண்ட ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல்லை நான்காவதாக களம் இறக்கியது.
இதில், மேக்ஸ்வெல் 55 பந்துகளுக்கு 120 ரன்களை குறைவான நேரத்தில் குவித்தார். இந்த போட்டியில் மட்டுமே மேக்ஸ்வெல் 8 சிக்ஸ் மற்றும் 12 பவுண்டரிகளை விளாசினார். மேக்ஸ்வெல் விளாசிய சதம் காரணமாக, ஆஸ்திரேலிய அணி 241 ரன்களை பெற்றிருந்தது. மேக்ஸ்வெல் உடன் கூட்டணியில் டிம் டேவிட் இணைந்து விளையாடினார். இருவரின் பார்ட்னர்ஷிப்பில் இருந்து 95 ரன்கள் அணிக்கு கிடைத்தன.