பெங்களூரு: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 9 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று தொடரின் 10வது போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் களம் இறங்கி விளையாடினர். முதல் ஓவர் முடிவில் 7 ரன்கள் எடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 2வது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணாவிடம் விக்கெட்டை இழந்தது. அந்த ஓவரின் 5வது பந்தில் சிக்சர் அடித்த ஃபாஃப் அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 21 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 4 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.