ஹைதராபாத்:இந்தியாவில சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியிலும், சென்னையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், மூன்று போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தமது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு,தொடக்க வீரரான பென் டக்கட்டும், கேப்டன் ஜோஸ் பட்லரும அருமையான துவக்கத்தை தந்தனர்.
பென் டக்கட் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்ஷர் படேல் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். அவர் குவித்த ரன்களில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.