தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 கிரிக்கெட்டில் இருந்து சிஎஸ்கே வீரர் ஓய்வு! - CPL 2024 - CPL 2024

நடப்பு கரீபியன் பிரிமீயர் லீக் சீசனுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் மூத்த வீரர் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Bravo - MS Dhoni (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 1, 2024, 3:16 PM IST

ஐதராபாத்: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரரான டுவெய்ன் பிராவோ, நடப்பு கரீபியின் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடருடன் அனைத்து வகையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிராவோ முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த பிராவோ கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். தொடர்ந்து சென்னை அணியின் பயிற்சியாளராக பிராவோ செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கரீபிரியன் பிரிமீயர் கிரிக்கெட் தொடரில் மட்டும் பிராவோ விளையாடி வந்த நிலையில், தற்போது அதில் இருந்து, ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இது ஒரு சிறந்த பயணம். இந்த சீசன் எனது கடைசி பயணமாக இருக்கும், மேலும் எனது கடைசி கரீபியன் லீக் போட்டியை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டுவெய்ன் பிராவோ முதல் இடத்தில் உள்ளார்.

இதுவரை 578 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பிராவோ அதில் 543 போட்டிகளில் பந்துவீசி 630 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். மேலும், 441 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 6 ஆயிரத்து 970 ரன்கள் குவித்து உள்ளார். சுமார் 11 சீசன்களாக கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில் பிரவோ விளையாடி வருகிறார்.

கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக இரண்டு ஆண்டுகள் மட்டும் விளையாடிய அவர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒன்பது ஆண்டுகள் விளையாடி வருகிறார். அதில் ஐந்து முறை கோப்பையையும் வென்று இருக்கிறார். மூன்று முறை கேப்டனாக அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்த பெருமை பிராவோவை சேரும்.

அது மட்டுமின்றி கரீபியன் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் பிராவோ உள்ளார். மொத்தம் 103 கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 155 ரன்களும், 128 விக்கெட்களும் பிராவோ வீழ்த்தி உள்ளார். இந்த சீசனில் அவர் விளையாட இருக்கும் நிலையில் மேலும் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியாவுடன் காதலா? சர்ச்சையை கிளப்பும் பாலிவுட் நடிகை! - Hardik Pandya Love affairs

ABOUT THE AUTHOR

...view details