கயானா:ஐசிசி டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், வெஸ்ட் இண்டீசின் காயனாவில் இன்று நடைபெறுகிறது. அங்குள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆனால் போட்டி நடைபெறும் மைதானத்தில் கடந்த சில மணி நேரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்போட்டியை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இருநாட்டு ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தற்போது மழை விட்டுள்ளதால் கூடியவிரைவில் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.