பெங்களூரு:இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தோடா கணேஷ். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தோடா கணேஷ் இந்திய அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில், கென்யா கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தோடா கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் குறித்து கென்யா கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கென்யா அணியை உலக கோப்பை தகுதிச் சுற்றில் வெற்றி பெறச் செய்வதே தனது லட்சியம் என தோடா கணேஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக 1996, 1999, 2003 மற்றும் 2011ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் கென்யா அணி விளையாடியது.
அதன்பின் ஏறத்தாழ 13 ஆண்டுகளாக கென்யா கிரிக்கெட் அணி எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. அந்த அணி உலக கோப்பை தகுதிச் சுற்றிலும் வெற்றி காணவில்லை. இதுகுறித்து பேசிய தோடா கணேஷ், கடந்த 10 ஆண்டுகளாக கென்யா அணியில் எந்தவிதமான சூழல் நிலவியது என தனக்கு தெரியாது என்றும் ஆனால் கென்யா அணியை உலக கோப்பை தொடரில் தகுதி பெற வைப்பதே தன்னுடைய தற்போதைய இலக்கு என்றும் அவர் கூறினார்.