பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்களுக்கான F56 பிரிவில் இந்திய வட்டு எறிதல் வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். யோகேஷ் கதுனியா 42.22 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரிலும் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
27 வயதான தனது முதல் முயற்சியிலேயே 42.22 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். பிரேசில் வீரர் Claudiney Batista dos Santos தங்கம் பதக்கம் வென்றார். தனது முதல் முயற்சியிலேயே Claudiney Batista dos Santos 48.86 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இது அவருக்கு ஹாட்ரிக் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் வீரர் Konstantinos Tzounis 41.32 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். போதிய தசை வளர்ச்சி குறைவின் காரணமாக அவதிப்பட்டு வரும் யோகேஷ் கதுனியா உலக அரங்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். முன்னதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2018ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு தொடரில் யோகேஷ் கதுனியா 45.18 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து உலக சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
யோகேஷ் கதுனியாவின் வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. பாராலிம்பிக்ஸ் பதக்க பட்டியலில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களுடன் 30வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:சென்னை, புதுச்சேரியில் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்! ஒரு தமிழக வீரர் கூட இல்லை? - India vs Australia Series