தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னை பார்முலா 4 கார் பந்தயம்: இரண்டாம் நாள் போட்டிகள் முழு அட்டவணை! - Chennai Formula 4 Race - CHENNAI FORMULA 4 RACE

சென்னை பார்முலா 4 கார் பந்தயத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 10:45 மணி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் (Image Credit - Udhayanidhi Stalin X Page)

By ETV Bharat Sports Team

Published : Sep 1, 2024, 8:05 AM IST

Updated : Sep 1, 2024, 9:15 AM IST

சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் பார்முலா 4 ரேஸிங் சர்க்யூட் போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 31) துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்று வருகின்றன. இறுதி நாளான இன்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 10:45 மணி வரை, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. சோதனை ஓட்டம், தகுதிச் சுற்றுப் போட்டிகள் என பல்வேறு நிலைகளில் இன்றைய போட்டிகள் நடைபெறுகின்றன.

காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை சோதனை ஓட்டங்கள் நடைபெறவுள்ளன. அதனை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஐஆர்எல் -டிரைவர் ஏ பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளும், மாலை 3:55 மணி முதல் மாலை 4:35 மணி வரை எல்ஜிபி 4 பிரிவு பந்தயங்களும் நடைபெறுகின்றன.

மாலை 4:50 மணி முதல் 5:35 மணி வரை, பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் பந்தயங்களும், 5:50 மணி முதல் 6:35 மணி வரை ஐஆர்எல் - டிரைவர் ஏ பிரிவு போட்டிகளும் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து மாலை 6:45 மணி முதல் 7:45 வரை, ஒரு மணி நேரம் கார் பந்தய வீரர்களின் சாகச நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்முலா 4 இன்றைய போட்டிகள் (Credits - ETV Bharat Tamilnadu)

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 7:55 மணி முதல் 8:40 மணி வரை எல்ஜிபி 4 பிரிவு போட்டிகளும், 8:50 மணி முதல் 9:35 வரை பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் பந்தயங்களையும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இறுதியாக 9:50 மணி முதல் 10:35 மணி வரை ஐஆர்எல் -டிரைவர் பி பிரிவு பந்தயங்கள் நடைபெறுகின்றன. இரவு 10:45 பந்தய சாலை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி நேர அட்டவணை மாறுதலுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது நடைபெற்றுவரும் பார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயம், தெற்காசியா மற்றும் இந்தியாவின் முதல் இரவு நேர போட்டியாகும். சென்னை தீவு திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகிய சாலைகளை உள்ளடக்கி மொத்தம் 3.5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட சாலையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:Important: கார் பந்தயம் பாக்கப் போறீங்களா! மறக்கமாக இத படிங்க!

Last Updated : Sep 1, 2024, 9:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details