தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு! - csk vs rcb

CSK Vs RCB: பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

csk vs rcb ipl 2024
csk vs rcb ipl 2024 (Credit: ETV Bharat Tamil Nadu)

By PTI

Published : May 18, 2024, 7:15 PM IST

பெங்களூரு: ஐபிஎல் போட்டிக்கான 68வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அதேபோல், இப்போட்டியில் வெல்லும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால், ரசிகர்களிடையே மிகுந்த ஏதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், இப்போட்டிக்கான டாஸ் தற்போது வீசப்பட்டது. அதில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

பெங்களூரு அணி: ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(விகீ), கர்ண் ஷர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்.

சென்னை அணி: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(விகீ), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா.

இதையும் படிங்க:ஐபிஎல் அணிகளுக்கு வருமானம் எப்படி வருகிறது? - Ipl Money Making:

ABOUT THE AUTHOR

...view details