தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்: இந்திய வீரர்கள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்! - CHENNAI OPEN ATP CHALLENGER 2025

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற இரட்டை பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்கள் ஜோடி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

பந்தை  சாதுர்யமாக எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள்
பந்தை சாதுர்யமாக எதிர்கொள்ளும் இந்திய வீரர்கள் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2025, 11:00 PM IST

சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய ஜோடிகளான இரண்டாம் நிலை வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் மற்றும் நடப்பு சாம்பியன் ராம்குமார் ராமநாதன் - சாகேத் மைனேனி ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.

இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டியில் ஜிம்பாப்வேயின் கோர்ட்னி ஜான் லாக் - ஜப்பானின் ரியோ நோகுச்சிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் நெடுஞ்செழியன் - பிரசாந்த் ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றனர். இரண்டு அணிகளுக்கும் இடையே ஒரு நேரத்திற்கு மேலாக ஆட்டம் நடைப்பெற்றது.

மற்றொரு இரட்டையர் போட்டியில் கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற இந்திய அணியின் ராமநாதன் - மைனேனி ஜோடி வெளிநாட்டு ஜோடியான எகோர் அகஃபோனோவ் - எவ்ஜெனி டியுர்னேவ் ஆகியோரை 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில் இந்திய ஜோடிகள் வெற்றி பெற்றால் சனிக்கிழமை நடைப்பெறும் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள்.

நாளை நடைப்பெறும் அறையிறுதி போட்டியில் இந்திய ஜோடி நெடுஞ்செழியன் - பிரசாந்த் ஜப்பானிய ஜோடியான ஷின்டாரோ மோச்சிசுகி - கைட்டோ உசுகியை ஆகியோருடன் மோதுகின்றனர்.

மற்றொரு அறையிறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி ராமநாதன் - மைனேனி தொடரின் முதல் நிலை வீரர்களான ரே ஹோ - மேத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸை எதிர்கொள்கிறார்கள்.

இதனிடையே, இன்று நடைப்பெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தொடரின் முதல்நிலை வீரரான பில்லி ஹாரிஸ், துருக்கியின் எர்கு கிர்கினை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில் முன்னாள் அமெரிக்க ஓபன் காலிறுதிப் போட்டியாளரான ஹாரிஸை, செக் குடியரசு வீரர் டாலிபோர் ஸ்வர்சினா 6-1, 6-1 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார்,

இன்னொரு போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிப் போட்டியாளர் அஸ்லான் கரட்சேவ் இரண்டாவது சுற்றில் கஜகஸ்தானின் டிமோஃபி ஸ்கடோவிடம் 6-4, 7-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரில் ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டிகளும், இரட்டையர் பிரிவில் அரையிறுதிப் போட்டிகளும் நாளை (பிப்.7) நடைபெறுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details