நிங்போ :ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் 16 சுற்றில் இந்திய இணை அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜப்பானின் என். மட்சுயமா மற்றும் சி. ஷிடா ஜோடியை எதிர்கொண்ட நிலையில், தோல்வியை தழுவியது.
இருப்பினும் தரவரிசை அடிப்படையில் இந்திய இணை நடப்பாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிஒ பெற்றது. முன்னதாக முதல் சுற்றில் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிராஸ்டோ இணை மற்றொரு இந்திய இணையான டிரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் இணை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிக்கு இரட்டை பிரிவில் மொத்தம் 48 ஜோடிகள் தகுதி பெறும். ஆடவர் இரட்டை பிரிவு, மகளிர் இரட்டை பிரிவு மற்றும் கலப்பு இரட்டை பிரிவுகளின் அடிப்படையில் உலக பேட்டமிண்டன் சம்மேளனத்தின் விதிமுறைகளின் கீழ் இந்த தகுதி நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிராஸ்டோ இணை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
அதேபோல் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ரவுன்ட் 16 சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியை தழுவி வெளியேறினார். ரவுண்ட் 16 சுற்றில் சீனா வீராங்கனை ஹான் யுயே எதிர்கொண்ட சிந்து 18க்கு 21, 21-க்கு 13, மற்றும் 17-க்கு 21 ஆகிய செட்களில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறினார்.
இதையும் படிங்க :இந்தியாவுடனான எல்லை பிரச்சினை.. "உறுதியான உறவின் முக்கியத்துவத்தை விரும்புகிறோம்" - சீனா! - China On Border Issue