ஐதராபாத்:கிரிக்கெட், உலகில் அதிகம் பேர் விரும்பும் விளையாட்டுக்களில் ஒன்று. தங்களது அபரிவிதமான பேட்டிங் அல்லது பந்துவீச்சு ஸ்டைல், சாதனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த கிரிக்கெட் வீரர்கள் உண்டு. அதேநேரம் ஆண்களுக்கு நிகராக தற்போது மகளிர் கிரிக்கெட்டும் அசூர வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது.
வீரர்களுக்கு இணையாக சில வீராங்கனைகளும் தங்களது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறன் மூலம் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். உலகின் டாப் கவர்ச்சிகர கிரிக்கெட் வீராங்கனைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
எலிசி பெர்ரி (Ellyse Perry):
டென்னிஸ்க்கு ஒரு மரிய ஷராபோவா என்றால் கிரிக்கெட்டுக்கு எலிசி பெர்ரி. அழகு மட்டுமின்றி தனது தனிப்பட்ட திறமையின் காரணமாகவும் அனைவரும் விரும்பும் வீராங்கனை ஆனார். 16 வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கிய எலிசி பெர்ரி, கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து உலக கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய பெண் என்ற சாதனையையும் எலிசி பெர்ரி படைத்துள்ளார்.
ஹோலி பெர்லிங் (Holly Ferling):
தனது 14 வயதில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஜூனியர் கிரிக்கெட் அணிக்காக முதல் முறையாக அறிமுகமான ஹோலி பெர்லிங், தனது முதலாவது போட்டியின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு முதல் முறையாக தேர்வானார். தொடர்ந்து முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறார். அளவற்ற அழகின் காரணமாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இஷா குஹா (Isa Guha):
2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இஷா குஹா அதற்கு முன் ஏறத்தாழ 10 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இஷா குஹா 2002ஆம் ஆண்டு தனது 17வது வயது இந்திய அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் களமிறங்கினார். மகளிர் ஆஷஸ் கிரிக்கெட்டில் 2007 -2008ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.
சாரா ஜேன் டெய்லர் (Sarah Jane Taylor):
இந்த பட்டியலில் மற்றொரு இங்கிலாந்து வீராங்கனை சாரா ஜேன் டெய்லர். 2008ஆம் ஆண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஆதிக்கம் செலுத்திய நபராக சாரா அறியப்படுகிறார். விக்கெட் கீப்பர், தொடக்க வீராங்கனை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என இங்கிலந்து அணியில் முக்கிய பங்காற்றி உள்ளார்.