ஐதராபாத்:வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரத்தில் நடைப்பெற்றது. இதில் முதல் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் வங்கதேசம் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடரை இழந்த வங்கதேசம்:
இதனால் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (நவ.12) சார்ஜாவில் நடைப்பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 244 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்மத்துல்லா 98 ரன்களும், கேப்டன் மெஹதி ஹசன் 66 ரன்களும் எடுத்தார்.
இதையடுத்து இலக்கை துரத்தி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
கோலி சாதனை முறியடிப்பு:
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இந்த சதத்தின் மூலம் ரஹ்மானுல்லா குர்பாஸ் பல சாதனைகளை முறியடித்து உள்ளார். குறிப்பாக 23 வயதுக்குள் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை ரஹ்மானுல்லா குர்பாஸ் படைத்துள்ளார். தனது 8வது சதத்தை ரஹ்மானுல்லா குர்பாஸ் பூர்த்தி செய்த போது அவருக்கு வயது 22 வருடம் 312 நாட்களாகும்.
குறைந்த வயதில் அதிக சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் மற்றும் தென் ஆப்பிரிக்கா வீரர் குயிண்டன் டி காக் ஆகியோருடன் சாதனையை ரஹ்மானுல்லா குர்பாஸ் பகிர்ந்து கொண்டார். மூவரும் தங்கள் 23 வயதில் 8 சதங்களை விளாசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஆப்கானிஸ்தான் வீரர்:
இந்த பட்டியலில் இந்திய அணி வீரர் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி தனது 23வது வயதில் ஏழு சதங்களை விளாசிய நிலையில் அந்த சாதனையை ரஹ்மானுல்லா குர்பாஸ் தற்போது முறியடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் ஆப்கான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் படைத்தார்.
இதற்கு முன் முகமது ஷாசாத் ஆப்கானிஸ்தான் அணிக்காக 6 சதங்கள் அடித்து இருந்ததே சாதனையாக இருந் நிலையில் தற்போது அந்த சாதனையை ரஹ்மானுல்லா குர்பாஸ் முறியடித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் அவர் ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக மூன்று சதங்களை அடித்துள்ளார்.
இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் கோப்பை? ஐசிசி அதிரடி முடிவு?