பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) 10 மீட்ட ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாகெர், சரபோஜித் சிங் இணை விளையாடியது.
இந்திய இணை 580 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்புக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு இந்திய ஜோடி ரிதம் சங்வான் மற்றும் அர்ஜுன் சீமா 576 புள்ளிகள் எடுத்து 10வது இடத்தை பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. இந்திய இணை மனு பாகெர், சரபோஜித் சிங் நாளை (ஜூலை.30) மதியம் 1 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.