மேஷம்: தொழில்முறை முயற்சிகளில் சில தடைகளையும், சிரமங்களையும் சந்திக்க நேரிடும். ஆனால், உங்கள் விடாமுயற்சியும், கடின உழைப்பும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை சமாளிக்க உதவும். குழப்பமான மனநிலை இருக்கும் பட்சத்தில், சீரான மனநிலை மற்றும் மனதைச் சமநிலைப் படுத்திய பின்னர் முடிவுகளை எடுப்பது நல்லது. உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளை கவனத்தில் கொள்வது அவசியம். காதல் உறவுகள் செழிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். உத்தியோகத்தில் சில பதற்றம் இருக்கும். ஆனால், தொழில்முறை இலக்குகளை எட்டிப்பிடிப்பது கடினமல்ல.
ரிஷபம்:விரக்தி மற்றும் கோபம் ஏற்படுவதைத் தடுக்க எண்ணங்களைக் கட்டுக்குள் வைத்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சார்ந்த சூழ்நிலைகள் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. இது உங்கள் சொத்துக்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். முதலீடு செய்வது அல்லது புதிய வணிக கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
தேர்வுக்குப் படிப்பவர்கள் அல்லது போட்டிகளில் பங்கேற்பவர்கள் முன்னேற்றங்களுக்கான வாய்ப்புள்ளது. காதல் துணையுடன் நெருக்கமாக வளர ஒரு வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் ஒரு குறிப்பிடத்தக்கப் பயணத்தைத் தொடங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தாயின் நலனைப்பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, அவருக்கு அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் வழங்குங்கள்.
மிதுனம்:வேலையில் அதிக பணிச்சுமை காரணமாக சோர்வாக உணர்வீர்கள். பணிகளில் செய்து முடிப்பது பெரும் போராட்டமாக இருக்கும். நிதி சிக்கல்களைச் சமாளிக்கும் வாய்ப்புள்ளது. நிலம், சொத்து மற்றும் வாகன விற்பனையில் தாமதம் ஏற்படலாம். உணவுப் பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சத்தான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்வது சிறந்தது. காதல் உறவுகளில் காதலும், கோபமும், சுகமும், துக்கமும் கலந்த ஒரு கலவையான தருணங்களாக இருக்கும். கணவன் - மனைவியிடையே இணக்கமான மற்றும் அன்பான உறவு ஏற்படும்.
கடகம்:வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே பயணத்தின் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். காதல் உறவுகளுக்கு இடையே தவறான புரிதல்களைத் தடுக்க கவனமாக இருக்கவும். உங்கள் கூட்டாளியின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, பரஸ்பர புரிதல் மூலமாக பணியிடத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை தேடுவீர்கள். நிலம் மற்றும் சொத்து தொடர்பான தகராறுகளில் கவனமாக நடவடிக்கை எடுக்கவும்.
சிம்மம்:இசை, கலை மற்றும் நடனம் மீதான இளைய தலைமுறையினரின் ஆர்வம் அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்களுடன் கலந்து உரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்குவீர்கள். சொத்து வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் வாகனங்கள் வாங்க வேண்டும் போன்ற ஆசைகள் நிறைவேறும். காதல் உறவுகள் தீவிரமடைந்து, திருமணத்தில் மலர வாய்ப்புள்ளது. மனம் கவர்ந்தவருடன் பயணிக்கும் வாய்ப்பு அமையும். கல்வி செயல்பாடுகளில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சிறந்த பலனைத்தரும்.
கன்னி:வேலைக்காக வெகு தொலைவில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. பண விவகாரங்கள் தொடர்பான பணியை சிந்தித்து, திட்டமிட்டு அணுகுவது முக்கியம். காதல் உறவுகளில் மகிழ்ச்சியைப் பேண நேர்மையாக இருக்க வேண்டும். தனித்தனி பாதைகளுடன் வாழ்க்கையில் நடப்பது சவால்களுக்கு வழிவகுக்கும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும். உணவில் கவனமாக இருப்பது முக்கியம். நேர்மறையான சிந்தனைகள் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான திறவுகோலாகும்.
துலாம்:விடாமுயற்சி மற்றும் அன்புக்குரியவர்களின் ஆதரவுடன் தடைகள் நீங்க வாய்ப்புள்ளது. வேலையில் சிக்கல்கள் இருக்கும். அவற்றை சமாளிக்க கடினமாக இருந்தாலும், சிந்தித்து செயல்பட்டால் சுமுகமான முடிவு கிடைக்கும். குடும்பத்துடன் இணைந்து கூட்டு முடிவுகளை எடுங்கள். வழிபாட்டுத் தலத்திற்குச் செல்வதன் மூலம் நீங்கள் ஆறுதலையும், நேர்மறையான எண்ணங்களையும் பெறுவீர்கள். காதல் உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வணிக முயற்சிகளில் வெற்றிக்கு வாய்ப்புள்ளது.