தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

வார ராசிபலன்: காதல் துணையுடன் இனிமையான தருணங்களை செலவிடுவீர்கள்.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்! - Weekly Rasipalan in tamil - WEEKLY RASIPALAN IN TAMIL

Weekly Rasipalan in Tamil: ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசி பலன்களைக் காணலாம்.

Weekly Rasipalan
வார ராசிபலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 7:54 AM IST

மேஷம்:காதல் துணையை உங்கள் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துவீர்கள். திருமணமானவர்கள் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். நீங்கள் முன்பு செய்த முதலீட்டின் முழு பலனையும் பெறுவீர்கள். தினசரி வருமானம் அதிகரிக்கும். அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் சரியாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், தொடர்புகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

குழந்தைகளின் கல்விக்காக தெரிந்தவர்களிடம் பேசுவீர்கள். வீட்டில் பூஜைகள் நடைபெற வாய்ப்புள்ளது. சகோதரி மற்றும் சகோதரரின் உயர்கல்விக்காக உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடுவீர்கள். சமுதாய நலனுக்காக பாடுபடுபவர்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். இன்று சில குடும்பப் பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படும். அவற்றை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவீர்கள். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் பார்வையில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய டிவி அல்லது குளிர்சாதன பெட்டி வாங்கலாம்.

ரிஷபம்: காதல் துணையுடன் இனிமையான காதல் தருணங்களை செலவிடுவீர்கள். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் குடும்பத்துடன் ஒரு ஆன்மீக பயணத்திற்கு செல்ல திட்டமிடுவீர்கள். அங்கு அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் எண்ணங்களை தந்தையிடம் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வீட்டின் அலங்காரத்திற்காகவும், மராமத்துக்காகவும் நிறைய பணம் செலவிடுவீர்கள்.

உங்கள் குழந்தைகளிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நண்பர்களின் உதவியால் உங்கள் பொருளாதார நிலையை நன்கு ஸ்திரப்படுத்திக் கொள்வீர்கள். இந்த வாரம் நீங்கள் சில புதிய வேலைகளையும் செய்ய திட்டமிடுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்படும், ஆனால் கவனக்குறைவாக இருக்காதீர்கள். மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பதைக் காணலாம். புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் உள்ளது. உங்கள் மனதின் ஆசையை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள்.

மிதுனம்:நிதி நிலை உறுதியாக இருக்கும். வியாபாரம் செய்பவர் எனில் உங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை வாழ்பவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காதலரை அறிமுகப்படுத்தலாம்.

மாணவர்கள் மனதை அங்கும் இங்கும் அலைய விடுவதால், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது குறையும். இந்த வாரம் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் முன்பு செய்த முதலீட்டின் முழு பலனையும் பெறுவீர்கள். புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இது குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை செய்பவர்களும் நல்ல பலன்களைப் பெறலாம். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். நீங்கள் விளையாட்டை உங்களின் ப்ரோபஷனாக தேர்ந்து எடுக்கலாம். புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்: வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்றத் தாழ்வுகளைக் காண்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதன் மூலம் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதில் வெற்றி காண்பார்கள். உயர்கல்விக்கு உகந்த நேரம். உங்களுக்கு பிடித்த பாடத்தை படிக்க வாய்ப்பு கிடைக்கும். போட்டிக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். பருவநிலை மாற்றத்தால் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்னைகள் இருக்கலாம். காதல் உறவுகளுக்கு இந்த வாரம் நல்ல வாரம்.

உங்களுக்கும் உங்கள் காதலருக்கும் இடையிலான உறவு வலுவடையும். தினசரி வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசியலில் வெற்றி பெறுவீர்கள். தலைவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் வரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. பரம்பரை சொத்துக்களிலிருந்து பண வரவுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. யோசிக்காமல் பணத்தை முதலீடு செய்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே ஒருவரின் ஆலோசனையைப் பெற்ற பின்பு எந்த முடிவையும் எடுக்கவும்.

சிம்மம்: திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் எங்காவது பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் காதல் துணையை அறிமுகப்படுத்தலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். கூட்டாண்மை தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்விக்கு உகந்த நேரம்.

உங்கள் பாடத்திட்டங்களில் சிலவற்றை மாற்ற விரும்பினால், அதற்கான நேரம் இது. ஆரோக்கியத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்ப நலனுக்காக வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்படுவீர்கள். வீட்டில் உள்ள பெரியோர்களினால், உங்களுக்கு சில வீட்டுப் பொறுப்புகள் ஒதுக்கப்படும். அதை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைத்தால், பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

கன்னி:வருமானத்தைப் பொறுத்தவரையில் விசேஷமாக ஒன்றும் இல்லை. செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வியாபாரம் செய்பவர்கள், வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், அவர்களின் திறமைக்கு ஏற்ப முன்னேற்றம் காண்பார்கள். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நபர்களுக்கு சமூகத்திற்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். வீட்டில் உள்ள பெரியோரின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. நண்பர்களின் உதவியால் ஓரளவு வருமான ஆதாரங்கள் கிடைக்கும். உங்கள் நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் பல இனிமையான தருணங்களைக் கழிப்பீர்கள். வீட்டில் பூஜை நடைபெறும். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். அன்றாட பழக்கவழக்கத்தில், காலை நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை சேர்ப்பது நல்லது.

துலாம்: இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உங்கள் மனைவியுடன் எங்காவது வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். காதல் உறவுகளைப் பற்றி பேசுகையில், உங்கள் இதயத்தில் உள்ள அனைத்தையும் காதல் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். ஒருவருக்கொருவர் பரிசுகளையும் பரிமாறிக் கொள்ளலாம். பொருளாதார நிலை பலவீனமாக இருக்கும். ஆனால், வருமானம் நன்றாக இருக்கும். செலவுகள் கணிசமாக அதிகரிக்கலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், கண்டிப்பாக யாரையாவது கலந்தாலோசிக்கவும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்லும் வாய்ப்புகளும் உள்ளன.

பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கும், நிதி நன்மைகளுக்கும் வழிவகுக்கும். வேலையில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பதைக் காணலாம். போட்டியில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாறிவரும் வானிலை காரணமாக, ஆரோக்கியத்தில் சற்று சிறப்பாக கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்: திருமணமானவர்களின் இல்வாழ்க்கையில் சற்று பதற்றம் காணப்படும். தாமதம் ஏற்படாத வகையில், உங்கள் காதல் துணையை குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. வருமானம் நன்றாக இருக்கும்; ஆனால், செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. பட்ஜெட்டை சரியாக பின்பற்றினால் நல்லது. அரசு துறையிலிருந்தும் சலுகைகளைப் பெறலாம். மாணவர்கள் தங்கள் மனதை அங்கும் இங்கும் அலைய விடுவதால், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது குறையும்.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்காக நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி, அவர்களின் படிப்பிற்கு உதவுவீர்கள். அரசியலில் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. குடும்ப நலனுக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அந்த முடிவுகள் சற்றே கடுமையானதாகவும், கடினமானதாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றை குடும்பத்தின் சிறந்த நலனுக்காக எடுத்தே ஆக வேண்டும்.

தனுசு:குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். உங்கள் மனைவியுடன் ஒரு நீண்ட பயணத்திற்கு செல்வீர்கள். அங்கு நீங்கள் இருவரும் மிகவும் அன்யோன்யமாகவும், அன்பாகவும் பேசுவீர்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு, காதல் துணையை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த வாரம் சொத்து வாங்கும் யோகம் காணப்படுகிறது. செலவுகள் அதிகரிக்கும்.

உங்களுக்கு ஏதேனும் வழக்கு விவகாரங்கள் இருந்தால், அது முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது. முன்பு பணத்தை முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு முழு பலன் கிடைக்கும். பெற்றோருடன் புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. திருமணமாகாதவர்களுக்கு அவர்களின் மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்கும். உங்கள் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துவார்கள், ஆனால் சில நடவடிக்கைகள் கவனத்தை ஈர்க்கும்.

மகரம்:இந்த வாரம் உங்களுக்கு சற்று சுவாரசியமான ஒன்றாக இருக்கும். காதல் வாழ்க்கை வாழ்பவர்கள் தங்கள் காதல் துணையிடம் அவர்களுக்கு பிடிக்காத ஏதோ ஒன்றை சொல்லலாம். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை சில புதிய வேலைகளைத் தொடங்கச் சொல்லி ஊக்குவிக்கலாம். இதனால், வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர் எனில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை, பணியிடத்தில் சரியான நேரத்தில் முடிப்பார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சில முக்கியமான நபர்களின் உதவியுடன், உங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நிறைய முயற்சிகளை எடுத்து, அதில் வெற்றியும் பெறுவீர்கள். உங்கள் கூர்மையான புத்தியின் மூலம் நல்ல அறிவையும், அனுபவத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தின் வயது முதிர்ந்த பெரியவரின் ஆசிர்வாதத்தைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள், தொலைதூர பயிற்சி மையத்தில் சேருவார்கள். இதனால் அவர்களின் படிப்பில் எந்த இடையூறும் இருக்காது. வரும் காலங்களில் இதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள்.

கும்பம்:குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். உங்கள் எண்ணங்களை வீட்டில் உள்ள பெரியோருடன் பகிர்ந்து கொள்வீர்கள். சகோதரியின் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டில் மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசியலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தாயுடன் சேர்ந்து ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், மனதிற்கு அமைதி கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வீட்டின் உள் அலங்காரத்திற்கு நிறைய பணத்தை செலவழிப்பீர்கள்.

ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் தொடர்பாக சில பயணங்களை மேற்கொள்ளலாம், இது உங்களுக்கு நன்மை பயக்கும். நிலுவையில் உள்ள உங்கள் பணத்தைப் பெற உங்களுக்கு உதவும் ஒரு முக்கியமான நபரை சந்திப்பீர்கள். அவரின் ஆதரவு உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். பரம்பரை சொத்துக்களிலிருந்து பண லாபங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது.

மீனம்: திருமணமாகாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். காதல் வாழ்க்கையில் இனிமை இருக்கும். தினமும் வருமானம் நன்றாக இருக்கும். செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும். இருப்பினும் நீங்கள் கொஞ்சம் பணத்தையும் மிச்சப்படுத்துவீர்கள். இதனால் எதிர்காலத்தில் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ள மாட்டீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். உங்கள் பதவி உயரும். மாணவர்களுக்கு இந்த வாரம் ஒரு சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும்.

குடும்பத்தில் தொடரும் கருத்து வேறுபாடு உங்கள் படிப்பை பாதிக்கலாம். போட்டியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைத்தால், பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் கல்வியைத் தொடர ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு செல்லலாம். வெளிநாட்டில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். அதனால் தொழிலில் உங்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும் மற்றும் உங்கள் வருமானமும் அதிகரிக்கும்.

ABOUT THE AUTHOR

...view details