மேஷம்:காரணம் ஏதும் இல்லாமலே, இன்று தனிமையில் இருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் அதேவேளையில், அதைவிட நீங்கள் அவர்களுக்கு அதிகம் செய்யும் நிலைமை இருக்கும். பணியில் மூத்தவர்களுடன் உங்கள் அறிவுத் திறனை பகிர்ந்து கொள்வீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தும் தேவையும் உள்ளது.
ரிஷபம்:இன்று உங்களுக்கு படைப்பாற்றல் திறன் அதிகம் இருக்கும். நீங்கள் பணி செய்யுமிடத்தில் கடுமையாக உழைக்கும் அதேநேரத்தில், புதுமைகளைப் புகுத்தி, அதனை செயல்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். உங்களது மென்மையான பேச்சின் மூலம், பலர் உங்களை விரும்புவார்கள்.
மிதுனம்:வீட்டில் குதூகலமும், மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் அதிகம் ஈடுபாடு கொண்டு, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம், நெடுநாட்களாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
கடகம்:காதல் துணையுடன் கடைகளுக்குச் சென்று அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் அதிக பணம் செலவு செய்வீர்கள். நீங்கள் அவர்களுக்காக அதிக பணம் செலவு செய்து அவர்கள் மனதை மகிழ்விக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டுள்ளீர்கள். பதிலுக்கு அவர்களும் உங்களது மனதை மகிழ்விக்கும் வகையில், பரிசுகளை தருவார்கள்.
சிம்மம்: விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்த வகையில் நடக்கும் சாத்தியம் மிகவும் குறைவு. அதனால் அது குறித்து கவலைப்படாமல், நடப்பவை நல்லதற்கு தான் என்ற எண்ணத்துடன் மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற நபரைச் சந்தித்து, அதன் மூலம் உங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
கன்னி: சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் உங்களது தன்மையின் மூலம், சுற்றியிருக்கும் மக்களை மகிழ வைப்பீர்கள். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும். குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொண்டு உங்களது கலாச்சாரத்தை மதிப்பதன் மூலம் குடும்ப உறவு பலப்படும்.