மேஷம்: இன்று நீங்கள் தனிமைப் படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்கால பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.
ரிஷபம்: இன்று சிறிது கடினமான பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும். எச்சரிக்கையுடன் கவனமாக செயல்படவும். நன்றாக சிந்தித்து, பொறுமையாக செயல்படவும். இன்றைய தேவை அது மட்டுமே. தடைகள் உங்களை ஒன்றும் செய்யாது. சிறந்த வெற்றியடைவீர்கள்.
மிதுனம்:கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக மனதில் தோன்றும். அதனால் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தைப் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.
கடகம்: இன்று உங்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒரு வேலை செய்ய வேண்டும் என்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தோட்டவேலை, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்கு சிறந்த நாள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக, நேரம் மற்றும் பணம் ஆகியவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிம்மம்: இன்று, பங்குச்சந்தையின் மூலம் நிதி வரவு இருக்கக்கூடும். முதலீட்டாளர்களால் உங்கள் முதலீடுகளுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்த கடன்களைத் தீர்த்து விடுவீர்கள். பொழுதுபோக்கிற்காக பணம் செலவழிக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி:குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் உங்களையும் உங்கள் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத் துறையை பொருத்தவரை சாதகமான நிலை இருக்கும். மாலையில் நிம்மதியாக நேரத்தைக் கழிப்பீர்கள். கோயிலுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.