மேஷம்:காரணம் ஏதும் இல்லாமலே, நீங்கள் இன்று தனிமையில் இருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் நீங்கள், அதேவேளையில் அதை விட அவர்களுக்கு அதிகம் செய்யும் நிலைமை இருக்கும். பணியில் உங்கள் மூத்தவர்களுடன் அறிவுத்திறனைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் தேவையும் உள்ளது.
ரிஷபம்:உங்களுக்கு படைப்பாற்றல் திறன் அதிகம் இருக்கும். நீங்கள் பணி செய்யுமிடத்தில் கடுமையாக உழைக்கும் அதேநேரத்தில், புதுமைகளைப் புகுத்தி அதனை செயல்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். உங்களது மென்மையான பேச்சின் மூலம், பலர் உங்களை விரும்புவார்கள்.
மிதுனம்:இன்றைய தினத்தில் வீட்டில் குதூகலமும், மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் நீங்கள் அதிகம் ஈடுபாடு கொண்டு, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம், நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
கடகம்:காதல் துணையுடன் கடைகளுக்குச் சென்று, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க பணம் செலவழிப்பீர்கள். உங்களது முயற்சியை கண்டு மகிழும் உங்கள் காதல் துணையும், அதைவிட பத்து மடங்கு அதிகமாக உங்களுக்கு பரிசையும், அன்பையும் வழங்குவார்கள்.
சிம்மம்:வாழ்க்கையில் எதுவும் சுலபமாகக் கிடைப்பதில்லை. கடின உழைப்பு தேவைப்படாத விஷயங்களில் கூட, நீங்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். உங்கள் முயற்சியின் மூலம் நீங்கள் திறமையாக செயல்பட்டு வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
கன்னி:சுற்றியுள்ளவர்கள் உங்களைப் பார்த்து வியந்து ஊக்கம் பெறுவார்கள். உங்கள் அறிவாற்றலும், அனைவரையும் அனுசரித்துச் செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்று குடும்பத்தினருடன் நல்ல நிலையில் நேரம் செலவழிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள் மற்றும் விஷயங்களில் உங்கள் குடும்பத்தினர் மீது அதிக கவனம் செலுத்தவும்.
துலாம்:இன்று உங்களுக்கு சாதகமான நாளல்ல. அதற்காக, அதுகுறித்து நீங்கள் மனம் வருத்தம் அடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நல்லது நடக்கவில்லை என்றால் அது கெடுதல் என்று பொருள் இல்லை. சிறிது மன அழுத்தங்கள் இருந்தாலும், மாலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது உறுதி. மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.
விருச்சிகம்:வாழ்க்கை என்பது ஒரு சிறந்த ஆசிரியர். அதை நீங்கள் இன்று அனுபவித்து அறிவீர்கள். கடும் போட்டியின் மத்தியில், சந்தையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதனால் எதிர்ப்புகள் வந்தாலும், அது உங்களை பாதிக்காது. தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது கடவுள் இயல்பு என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் நீங்கள் தவறு செய்தாலும் அது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.
தனுசு: உங்கள் குடும்பத்தினருக்கும், மனதுக்குப் பிடித்தவர்களுக்கும் இன்று முன்னுரிமை கொடுப்பீர்கள். வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, அவர்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவீர்கள். அவர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் மூலம் உறவு பலப்படும். மாலையில், நண்பர்கள் வருகையினால் குதூகலம் அதிகரிக்கும்.
மகரம்:இன்று உங்களுக்குப் பொருத்தமான துணையை நீங்கள் கண்டறிந்து, அவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குடும்பம் தான் உங்களது உலகம். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு, நீங்கள் உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு, பல மடங்கு உங்களை வந்து சேரும்.
கும்பம்: இன்றைய தினத்தை, உங்களுக்காக செலவிட விரும்புவீர்கள். எனினும் இது தேவையான அமைதியையும், நிம்மதியையும் கொடுக்காது. விருப்பமில்லாத நிகழ்வுகளின் காரணமாக மன வருத்தம் ஏற்படும். நீங்கள் வணங்கும் கடவுளின் மூலம் தான் உங்களுக்கு தேவையான மனோசக்தி கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்.
மீனம்: நீங்கள் வீழ்த்த இயலாத நபராக இருப்பீர்கள். பலவகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறனைப் பெற்று இருப்பீர்கள். உங்களது செயல்திறனைப் பார்த்து மற்றவர்கள் பாராட்டுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை, இன்று லாபகரமான நாளாக இருக்கும் என்பதால் ஊக்கம் பெறுவார்கள்.