ETV Bharat / lifestyle

அரிசி சமைக்கும் போது செய்யக்கூடாத 6 தவறுகள்..இனி, இதை செய்யாதீர்கள்! - MISTAKES WHILE COOKING RICE

அரிசியை சமைப்பதற்கு முன் ஊறவைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அரிசி சமைக்கும் போது நாம் செய்யக்கூடாத தவறுகள் இதோ..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Jan 20, 2025, 2:20 PM IST

தென்னிந்திய மக்களின் பாரம்பரிய மற்றும் பிரதான உணவாக அரிசி உள்ளது. தினசரி ஒரு வேளையாவது அரிசி உணவை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், பலருக்கும் அவர்களின் உணவும் நாளும் முழுமை அடையாத நிலை ஏற்படும். இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசியை சரியாக சமைத்து உண்கிறோமா? என்பதே நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.. அதன்படி, அரிசி சமைக்கும் போது, நாம் தவிர்க்க வேண்டிய சில முறைகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கழுவாமல் சமைப்பது: நீங்கள் எந்த வகையான அரிசியை சமைத்தாலும், அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், சமைப்பதற்கு முன் அதை கழுவ வேண்டும். ஒன்று முதல் மூன்று முறை ஓடும் தண்ணீரில் கழுவுவதால் அரிசியின் மேற்பரப்பில் உள்ள மாவு தன்மை நீங்கும். இதனால், சில நேரங்களில் சமைத்த பின் ஏற்படும் பிசுபிசு தன்மையை ஏற்படாமல் இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - Freepik)

ஊற வைக்காமல் சமைப்பது: சமையலை வேகமாக முடிக்க வேண்டும் என நினைத்து, பலரும் அரிசியை ஊற வைக்காமல் சமைக்கின்றனர். இதனால், வேலை சீக்கிரமாக முடிந்தாலும், ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நெல் வளரும் போது, பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் தானியங்களுக்கும் பரவுகிறது. இதனால், சமைப்பதற்கு 15 முதல் 20 முன் அரிசியை ஊறவைத்து கழுவி சமையல் செய்வது அவசியம். குறிப்பாக, அரிசியை ஊறவைத்து சமைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரியான அளவு தண்ணீர்: சாதம் சமைப்பதில், தண்ணீரின் அளவு மிகவும் முக்கியமானது. தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருந்தால், அரிசி கஞ்சியாகவும், குறைவாக இருந்தால், சாதம் விதை விதையாக இருக்கும். அதனால்தான் போதுமான அளவு தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் அல்லது ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. தண்ணீரின் அளவு ஒவ்வொரு அரிசியை பொருத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - pexels)

ஹைய் பிளேமில் சமைப்பது: உணவு முறையில் அரிசியை சமைத்து சாப்பிடுவது மிகவும் சுலபமானது தான். ஆனால், மற்ற தானியங்கள் அல்லது காய்கறிகளை போல அரிசியை சமைக்கவும் குறிப்பிட்ட நேரம் தேவைப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?. அடுப்பை ஹைப் பிளேமில் வைத்தால், 10 நிமிடங்களில் சாதம் தயாராகிவிடும் என நாம் செய்யும் செயல் தவறானது. அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசியை குறிப்பிட்ட நேர அவகாசம் கொடுத்து சமைப்பதே சிறந்தது.

அடிக்கடி கிளறுவது: அரிசியை குக்கரில் வைத்தால் இந்த பிரச்சனை ஏற்படாது. இதே, வடிக்கும் முறையை பின்பற்றும் போது, அரிசி வெந்து விட்டதா? இல்லையா? என அடிக்கடி கிளறி கொண்டே இருக்ககூடாது. அரிசி உடையாமல், பஞ்சு போல இருப்பதற்கு பொறுமையாக சமைப்பது அவசியம்.

உடனே பரிமாறுவது: சாதன் வெந்து விட்டது என்றால், பலரும் அதனை உடனடியாக எடுத்து பரிமாற தொடங்கிவிடுவார்கள். இப்படி செய்யாமல், 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து பின்னர் பரிமாற வேண்டும். இதனால், சாதம் குலைந்து போகாமல் உதிரி உதிரியாக நல்ல அமைப்புடன் இருக்கும்.

இதையும் படிங்க: அரிசியில் வண்டு வராமல் இருக்க 'இந்த' பொருள் போதும்..ஒரு வருடமானலும் பிரஷ்ஷாக இருக்கும்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.